என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பிரபாள் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படம் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பிரபாஸ்

    பிரபாஸ்

    இந்நிலையில் நடிகர் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இரண்டாவது டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. நேற்று முன்தினம் 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.


    பொம்மை

    பொம்மை

    இந்நிலையில் பொம்மை படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியான ஒரு நாளில் மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளதாக எஸ்.ஜே.சூர்யா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

    இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருந்தார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    இந்நிலையில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    • நடிகர் சித்தார் 'டக்கர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.


    டக்கர்

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சித்தார்த்திடம் டுவிட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் கேட்கப்பட்டத்து. அதற்கு அவர், "சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை ஆனால், நான் எப்போதும் உண்மையை பேசியுள்ளேன். ஒரு நடிகனாக நான் இதை வருடம் முழுவதும் செய்கிறேன். ஆனால், என் உடன் பணியாற்றும் எந்த நடிகரும் நடிகையும் யாரும் இதை செய்வதில்லை. அவர்கள் ஏன் பேசவில்லை, நான் மட்டும் ஏன் பேசுகிறேன் என்று யாரும் அவர்களிடம் கேட்டதில்லை.


    சித்தார்த்

    உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க நான் சூப்பர் ஹீரோ அல்ல. இது எனக்கு பிடிக்கவில்லை. பல இயக்குனர்கள் என் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தேன். 'இவர் உண்மையைப் பேசுபவர்' என்று மக்களுக்கு அறிமுகம் செய்துவிட்டேன். இனி 'இவர்தான் சிறந்த நடிகர்' என்று அறிமுகப்படுத்த விரும்பினேன்" என்று கூறினார்.

    • பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார்.
    • இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், 'விக்ரம் வேதா', 'மாரி-2', 'கன்னிராசி', 'பாம்பன்', ' நீயா-2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', ' சண்டக்கோழி-2', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது பயத்தை முறியத்து பைக் ஓட்டி கற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் குழந்தையாக மற்றும் பதின் வயதில் இருக்கும் போது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கு மனதளவில் தடை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த பயத்தைப் போக்க இது நேரம் என்று முடிவு செய்துவிட்டேன்.


    அதனால், கடந்த வாரம் பைக் ஓட்டுவதன் முதல் படிநிலையான சைக்கிள், ஸ்கூட்டி, புல்லட் போன்ற வாகனங்களில் இருந்து தொடங்கினேன். கொஞ்சம் வருத்தப்பட்டேன் ஆனால், இது அனைத்தும் உங்கள் பயத்தை போக்குவதற்காக செய்வது. நாம் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி எழுந்தோம் என்பதே முக்கியம் " என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.


    கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கபில்தேவை சந்தித்து திரைப்படத்தின் கதைகளை பற்றி பேசினார். தொடர்ந்து இத்திரைபடத்தின் காட்சிகள் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. தற்போது புதுவையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது.


    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில் 'நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். 'மாவீரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    டப்பிங் பணியை முடித்த சிவகார்த்திகேயன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கினார்.


    டப்பிங் பணியை முடித்த சிவகார்த்திகேயன்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. 'மாவீரன்' படக்குழு தொடர்ந்து அப்டேட்களை குவித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    • இயக்குனர் வெங்கி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வித்தைக்காரன்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடித்து வரும் திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.


    வித்தைக்காரன்

    சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வித்தைக்காரன்' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை நடிகர் சதீஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
    • இவருக்கு சமீபத்தில் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்ற ஆண் குழந்தை பிறந்தது.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.


    சவுந்தர்யா-விசாகன் தம்பதி

    இதைத்தொடர்ந்து சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினர் தருமை ஆதினம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • 'சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை' படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள படம் 'சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை'. இப்படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், பி.சி.சோலங்கி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வினோத் பானுஷாலியின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சுபர்ன் எஸ் வர்மா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை' திரைப்படம் கடந்த மே 23ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.


    சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை

    சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை

    இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் பெற்றது. இந்நிலையில் ஜீ5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 7ஆம் தேதி வெளியிடவுள்ளது. இந்த வருடத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையும் படைத்த 'சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.


    விஜய்

    இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில், விஜய்யின் 68-வது படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வெங்கட்பிரபு படக்குழுவினரோடு சென்னை கடற்கரை அருகில் இருக்கும் ஓட்டலில் கதை விவாதத்தில் ஈடுபட்ட போது படத்தின் தலைப்பை 'சி.எஸ்.கே' என்று வைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள். இதனை விஜய் அனுமதி பெற்ற பிறகு முறைப்படி அறிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    • சில தினங்களுக்கு முன்பு வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சித்தி இத்னானி.
    • இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. அதன்பின்னர் முத்தையா இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    சித்தி இத்னானி

    சித்தி இத்னானி

    இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×