தருமை ஆதினத்திடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.இவருக்கு சமீபத்தில் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்ற ஆண் குழந்தை பிறந்தது.
சவுந்தர்யா-விசாகன் தம்பதி
சவுந்தர்யா-விசாகன் தம்பதி
Published on

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

சவுந்தர்யா-விசாகன் தம்பதி

இதைத்தொடர்ந்து சவுந்தர்யா-விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினர் தருமை ஆதினம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com