என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
    • இப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஆந்திராவில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' திரைப்படம் 3டி முறையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ள திரையரங்குகளின் முன் இருக்கையில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.



    'ஆதிபுருஷ்' பட விழா இன்று இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ள வரும் ரசிகர்களுக்காக மைதானத்தின் உள்ளே பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தை சுற்றிலும் காவி கொடிகள், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு உள்ளது. விழாவில் 200 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட உள்ளதாக கூறப்படுகிறது.


    இந்த விழாவில் 'ஆதிபுருஷ்' கதாநாயகன் பிரபாஸ் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    திருப்பதியில் பிரபாஸ்

    இதையடுத்து 'ஆதிபுருஷ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு நடிகர் பிரபாஸ் மற்றும் பட குழுவினர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் திருப்பதிக்கு வந்தனர். நேற்று இரவு திருமலைக்கு வந்த நடிகர் பிரபாஸுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, பிரபாஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    பிரபாஸ் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகவா லாரன்ஸின் முனி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா.
    • இவரின் கவர்ச்சி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த "முனி" படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.


    வேதிகா

    வேதிகா

    வேதிகா சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் வெளியிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இரண்டு டிரைலர்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. நேற்று முன்தினம் வெளியான 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் வைரலாகி வருகிறது.


    பொம்மை

    பொம்மை

    இந்நிலையில் இப்படத்தின் இசை ஆல்பம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆல்பம் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆல்பத்தை வெளியிடப்போகும் இரண்டு பிரபலங்கள் யார் என தெரியுமா? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி ஆர்வத்தை தூண்டியுள்ளனர்.

    இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


    இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    இந்நிலையில், 'மார்கழி திங்கள்' திரைப்படத்தில் இயக்குனர் சுசீந்திரன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'சுட்டு பிடிக்க உத்தரவு' என்ற திரைப்படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .
    • இப்படம் வருகிற 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா".
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார்.


    ரெஜினா

    ரெஜினா


    இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




    தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் 'ரெஜினா' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிங்கம் வெளியே வந்துதான ஆகணும் போன்ற வசனங்கள் இடம்பெற்ற இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.


    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மன்னா மாமன்னா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'பொறுத்தலின் வரிகளில் சலிப்படைந்து உடைத்தலின் வரிகளை எழுதுகிறபோது மட்டும் சுரக்கும் ஓர் பெருஞ்சுனை சுதந்திரம்' என்ற மாரி செல்வராஜ் வரிகளுடன் தொடங்கும் இப்பாடலின் வரிகளை அறிவு எழுதி பாடியுள்ளார். இதில், 'வானின் ஓச அது பறவை ஓச.. வாழ்வின் ஓச அது பறையோச' போன்ற அழுத்தமான வரிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெஜினா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
    • இதில் இயக்குனர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் 'ரெஜினா'. யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார்.


    ரெஜினா

    ரெஜினா

    கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.


    ரெஜினா

    ரெஜினா

    இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெங்கட்பிரபு, எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சித்ரா லட்சுமணன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், நடிகர் ஜெயபிரகாஷ், சிவஸ்ரீ சிவா, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, "நானும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷும் லண்டனில் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே நண்பர்கள்.

    ஆனால் அவருக்குள் இசை குறித்து இவ்வளவு ஆர்வம் இருக்கும் என எனக்கு ஒருபோதும் தெரிந்ததில்லை. என்னுடைய அப்பாவுக்கு தெரிந்திருக்கும். இந்த கோவிட் காலகட்டத்தில் தான் என்னிடம் இப்படி ஒரு டியூன் பண்ணி இருக்கிறேன் என்று முதன் முதலாக கூறினார். உண்மையிலேயே நன்றாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது. உண்மையில் இவர் தான் பண்ணுகிறாரா.. இல்ல வேறு யாரோ எழுதி இவர் பெயர் போட்டுக் கொள்கிறாரா என்கிற சந்தேகமும் கூட எழுந்தது.


    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு

    ஆனால் தொடர்ந்து இரண்டு மூன்று பாடல்களை இப்படி அனுப்பியதும் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என மிரண்டு விட்டேன். அதேசமயம் என்னுடைய அப்பாவுடன் இணைந்து தான் ஆல்பத்திற்க்காக முதல் பாடலை எழுதினார். ஆனால் படம் பண்ணும்போது அவரை கூப்பிட மறந்து விட்டார். ஆனால் என் அப்பாவுக்கு சதீஷ் தான் செல்லப்பிள்ளை.

    இந்த படத்தை இயக்கியுள்ள டொமின் டி'சில்வா தான் சதீஷின் முதல் ஆல்பத்தையும் இயக்கி இருந்தார். ஆனால் இவர்கள் இப்படி ஒரு படம் எடுப்பார்கள் என அப்போது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என என்னிடம் கூறியபோது, இதன் போஸ்டரை பிரித்துப் பார்த்ததுமே அது எனக்கே சவால் விடுவது போல இருந்தது.


    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு

    இந்த படம் குறித்து அவ்வப்போது என்னிடம் தொடர்பு கொண்டு பல சந்தேகங்களை கேட்பார் சதீஷ். நானும் படப்பிடிப்பில் இருந்தாலும் கூட நேரம் ஒதுக்கி அவருக்கு விளக்கம் அளிப்பேன். இந்த படம் வெளியாகும் ஜூன் 23ஆம் பெரிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

    மேலும் இந்த நிகழ்வில் விஜய் 68 பட அப்டேட் குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டபோது, "லியோ படம் முதலில் வரட்டும். அதன்பிறகு தளபதி 68 தான். அதற்கு முன் ஏதாவது நான் சொன்னால், எதற்கு ஒவ்வொரு பங்ஷனாக போய் படம் பற்றி பேசுகிறாய் என என்னை திட்டுவார்" என்றார்.

    • வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.
    • இவர் நடிக்கவுள்ள 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.


    தி டோர்

    தி டோர்

    இந்நிலையில் நடிகை பாவானா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தி டோர் (The Door)' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய்தேவ் இயக்குகிறார். இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • பிரபல நடிகை அனசுயா பரத்வாஜ் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனசுயா பரத்வாஜ், சின்னத்திரையில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் அனசுயா, கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தமிழில் வெளியான மைக்கல் படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.


    அனசுயா பரத்வாஜ்

    அனசுயா பரத்வாஜ்

    அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அனசுயா, தற்போது கோடை விடுமுறைக்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் வலம் வரும் அனசுயா தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.


    கணவருடன் அனசுயா பரத்வாஜ்

    கணவருடன் அனசுயா பரத்வாஜ்

    இந்நிலையில் வெள்ளை நிற பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அனசுயா, தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    • சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் சௌந்தரராஜா நடித்திருந்தார்.
    • தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

    சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார்.



    தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில், நிகில் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று "கட்டிஸ் கேங்" படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.

    • விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


     



    இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படத்தில் இடம்பெறும் முக்கிய பாடலை இன்று சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ஏராளமான நடன கலைஞர்களுடன் ரிகர்சல் நடந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

    ×