பாவனா பிறந்தநாள் பரிசாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா.இவர் நடிக்கவுள்ள 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாவனா பிறந்தநாள் பரிசாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.

தி டோர்
தி டோர்

தி டோர்

இந்நிலையில் நடிகை பாவானா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 86வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தி டோர் (The Door)' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய்தேவ் இயக்குகிறார். இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com