எஸ்.ஜே.சூர்யா பட ஆல்பத்தை வெளியிடும் பிரபலங்கள் யார் தெரியுமா? ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய படக்குழு

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் இரண்டு டிரைலர்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா பட ஆல்பத்தை வெளியிடும் பிரபலங்கள் யார் தெரியுமா? ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய படக்குழு
Published on

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பொம்மை
பொம்மை

பொம்மை

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. நேற்று முன்தினம் வெளியான 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் வைரலாகி வருகிறது.

பொம்மை
பொம்மை

பொம்மை

இந்நிலையில் இப்படத்தின் இசை ஆல்பம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆல்பம் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆல்பத்தை வெளியிடப்போகும் இரண்டு பிரபலங்கள் யார் என தெரியுமா? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி ஆர்வத்தை தூண்டியுள்ளனர்.

இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com