என் மலர்
சினிமா செய்திகள்
- நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார்.
- இவர் மீது இலங்கையை சேர்ந்த சியாமளா பண மோசடி புகார் அளித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் 'மனுசி' என்ற படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் சியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, "சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன். கடந்த 2018ம் ஆண்டு சினிமா வட்டாரங்கள் மூலம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் கருப்பர் நகரம் படத்தை தயாரித்து வருவதாகவும், அப்படத்தில் என்னை இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார். அதன்பின்னர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம், அவரும் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என கூறினார். அதன்பின்னர் அவரது வாக்குறுதியை ஏற்று, பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன், ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன்.

பிறகு படப்பிடிப்பு தொடங்கியது, ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர். அதன்பிறகு நான் பிரான்சிற்கு சென்றுவிட்டேன், சில மாதங்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் படம் குறித்து கேட்டபோது தற்காலிகாமாக படம் நிறுத்தபட்டுவிட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. எனவே விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் `இராவண கோட்டம்'.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இராவண கோட்டம்
இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நிரா’ என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டக்கர்
இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தொடர்சியான அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டக்கர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நிரா' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தண்டட்டி'.
- இந்த திரைப்படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இதையடுத்து 'தண்டட்டி' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM).
- இந்த திரைப்படத்தை டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

எல்.ஜி.எம்
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

எல்.ஜி.எம் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை டோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
#LGMteaser to be launched tomorrow, 7th June, by Namma Thala @msdhoni on his Facebook handle and @SaakshiSRawat on Instagram.
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) June 6, 2023
Stay tuned for a sneak peak of our #LGM journey! pic.twitter.com/kFXhJ0xetY
- ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி.
- இவர் தற்போது 'எஸ்கே21' படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்.கே.21
இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது.

ராஜ்குமார் பெரியசாமி பதிவு
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதளத்தில் கேமராவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் 'எஸ்கே21' படப்பிடிப்பு தொடங்கியதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’.
- இப்படம் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.
தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.

அஸ்வின்ஸ்
இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து அஸ்வின் திரைப்படம் வருகிற 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

அஸ்வின்ஸ் போஸ்டர்
அதன்படி, இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் வசந்த் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். காரணம் இல்லாமல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
"Asvins" is one of the toughest film for me as an actor to perform, do check it out at your nearby cinemas on JUNE 23rd in TAMIL & TELUGU. Get ready to feel this experience only in the big screens@SVCCofficial @Bvsnp @praveen2000 @taruntejafilm @Vimraman #AsvinsonJune23 pic.twitter.com/L6ERIE3UG8
— Vasanth Ravi (@iamvasanthravi) June 6, 2023
- நடிகர் ரிச்சர்ட் ரிஷி 'ருத்ரதாண்டவம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'பகாசூரன்' போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

யாஷிகா -ரிச்சர்ட் ரிஷி
இதைத்தொடர்ந்து, மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகாவும் காதலித்து வருவதாக சலசலத்து வந்தனர்.

ரிச்சர்ட் ரிஷி -யாஷிகா
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்களித்துள்ளார். இது குறித்து அவர், "நானும் யாஷிகாவும் நடிக்கும் படத்தின் புகைப்படங்களைத்தான் இணையத்தில் ஷேர் செய்தேன். இப்படத்தை கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். படத்தின் புரோமோஷனுக்காக தான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தேன், மற்றப்படி எனக்கும் யாஷிகாவிற்கும் நடுவில் காதலும் இல்லை கல்யாணமும் இல்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.
- இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் உள்ளார்.
தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

லிங்குசாமி -கனிமொழி -அறிவுமதி
தற்போது லிங்குசாமி கடந்த 2010-ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'பையா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அறிவுமதியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Such a honour to meet you @KanimozhiDMK mam with arivumathi annan. Such a great time it was & thanking you for sharing your valuable time with us mam. pic.twitter.com/7WJ8gFgdW1
— Lingusamy (@dirlingusamy) June 6, 2023
- பெரம்பலூரைச் சேர்ந்த இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான்.
- இவர் ’தமிழ் தேசம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் (வயது 40). இயக்குனரான இவர் மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து 'தமிழ் தேசம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் நேற்று தனது பிறந்த நாள், திருமண நாளை பெரம்பலூர், பாலக்கரை பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் உள்ள பாரில் தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பாருக்குள் அதிரடியாக புகுந்து மது அருந்தி கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்துல் ரஹ்மானின் நண்பர்கள் மற்றும் பாரில் மது அருந்தி கொண்டிருந்த சக மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது குறித்து பார் ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
- மேலும் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் 'ரெயின்போ' படத்தில் நடிக்கிறார்.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா சில இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது.

ராஷ்மிகா மந்தனா
தற்போது அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் 'ரெயின்போ' படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘போர் தொழில்’.
- இப்படம் வருகிற 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

போர் தொழில்
அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

போர் தொழில் போஸ்டர்
அதன்படி, இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியாக அறிவித்துள்ளது.
Por Thozhil storms the screens with a UA certification. Brace yourself for an edgy ride!#PorThozhil in Cinemas from 9 June#PorThozhilOn9June@ApplauseSocial #E4Experiments @epriusstudio @nairsameer @SegalDeepak @e4echennai @cvsarathi #PoonamMehra @vigneshraja89 pic.twitter.com/CpBA17u10X
— Applause Entertainment (@ApplauseSocial) June 6, 2023






