யாஷிகாவுடன் திருமணமா..? ரிச்சர்ட் ரிஷி அளித்த திடீர் விளக்கம்

நடிகர் ரிச்சர்ட் ரிஷி 'ருத்ரதாண்டவம்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ரிச்சர்ட் ரிஷி -யாஷிகா
ரிச்சர்ட் ரிஷி -யாஷிகா
Published on

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'பகாசூரன்' போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

யாஷிகா -ரிச்சர்ட் ரிஷி

இதைத்தொடர்ந்து, மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி சில தினங்களுக்கு முன்பு நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகாவும் காதலித்து வருவதாக சலசலத்து வந்தனர்.

ரிச்சர்ட் ரிஷி -யாஷிகா

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்களித்துள்ளார். இது குறித்து அவர், "நானும் யாஷிகாவும் நடிக்கும் படத்தின் புகைப்படங்களைத்தான் இணையத்தில் ஷேர் செய்தேன். இப்படத்தை கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். படத்தின் புரோமோஷனுக்காக தான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தேன், மற்றப்படி எனக்கும் யாஷிகாவிற்கும் நடுவில் காதலும் இல்லை கல்யாணமும் இல்லை" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com