புதிய பாடலை வெளியிட்ட சித்தார்த் படக்குழு

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நிரா’ என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டக்கர்
டக்கர்
Published on

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டக்கர்
டக்கர்

டக்கர்

இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தொடர்சியான அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டக்கர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நிரா' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com