என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் வைரலானது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,'பொம்மை' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'இந்த காதலில்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.



    • இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தருணம்’.
    • இந்த படத்தில் கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'தேஜாவு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.


    ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்நிலையில், 'தருணம்' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன்  பேசியதாவது, கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார்.  என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் .



    தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும் என்று பேசினார்.

    மேலும், நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது, நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலில் இருந்தே இந்தப்படத்தை பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி என்று பேசினார்.

    • இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட்.
    • இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் நகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஜே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் எம்.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    நிற்க அதற்கு தக போஸ்டர்

    கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

    வயலினில் ரத்தம் வடிவது போன்று உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • இப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    இறைவன் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இதையடுத்து 'இறைவன்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'இறைவன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


    • நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் `இராவண கோட்டம்'.
    • இப்படம் ஜூன் 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில், 'இராவண கோட்டம்' திரைப்படம் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    'இராவண கோட்டம்' திரைப்படம் ஜூன் 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    • இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    ஓம் ராவத் -கீர்த்தி சனோன்

    இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தரிசனத்தை முடித்துவிட்டு காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். கோவிலின் முன் இயக்குனர் ஓம் ராவத் இவ்வாறு செய்தது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


    ஓம் ராவத் -கீர்த்தி சனோன்

    இந்நிலையில், திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் முத்தமிட்டதற்கு ஆந்திர மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தை காக்க வேண்டும். உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா, 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், 'துப்பாக்கி முனை' மற்றும் 'கபடதாரி' படங்களின் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். 'விக்ரம் வேதா' மற்றும் 'சுழல்' புகழ் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.


    இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து முத்தமிட்ட இயக்குனர் ஓம் ராவத்

    இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வெளியே வந்த படக்குழுவினர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இயக்குனர் ஓம் ராவத்தின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கஸ்டடி'.
    • இப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'கஸ்டடி'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.



    இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    கஸ்டடி போஸ்டர்

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கஸ்டடி' திரைப்படம் ஜூன் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் பிரபாஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது.


    இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள 'வந்து கொண்டிருக்கிறேன் இராவணா. வந்துகொண்டிருக்கிறேன் தர்மத்தின் இரு பாதங்களை கொண்டு அதர்மத்தின் பத்து தலைகளை கொய்ய' போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    இதற்கு முன்பு வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாக பல சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்.
    • தற்போது 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.


    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    விஜய்

    விஜய்

    இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×