திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சனோன்.. திடீரென முத்தமிட்ட இயக்குனர்

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'.இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன்
Published on

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆதிபுருஷ்

'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து முத்தமிட்ட இயக்குனர் ஓம் ராவத்

இந்நிலையில், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வெளியே வந்த படக்குழுவினர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இயக்குனர் ஓம் ராவத்தின் இந்த செயல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com