என் மலர்
நீங்கள் தேடியது "ரமேஷ் ரவிச்சந்திரன்"
- இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா, 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், 'துப்பாக்கி முனை' மற்றும் 'கபடதாரி' படங்களின் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். 'விக்ரம் வேதா' மற்றும் 'சுழல்' புகழ் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






