இரண்டாவது பாடலை வெளியிட்ட 'பொம்மை' படக்குழு

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பொம்மை
பொம்மை
Published on

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,'பொம்மை' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'இந்த காதலில்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com