ஆகஸ்ட் மாதத்தை புக் செய்த ஜெயம் ரவி படக்குழு

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.இப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி
Published on

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இறைவன் போஸ்டர்

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இதையடுத்து 'இறைவன்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'இறைவன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com