என்ன தொட்டு தொட்டு பாக்குறான்.. வெங்கட் பிரபு வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொம்மை'.இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
என்ன தொட்டு தொட்டு பாக்குறான்.. வெங்கட் பிரபு வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்
Published on

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com