என் மலர்
நீங்கள் தேடியது "kirthi shetty"
- இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
- இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை படத்தின் 'First Punch' முதல் சிங்கிளை படக்குழு வெளிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

கஸ்டடி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கஸ்டடி
இந்நிலையில் கஸ்டடி படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாப்பாத்திரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இப்படத்தில் ரேவதியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. அதன்பின்னர் உப்பென்னா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து சியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்ததன் மூலம் பலரின் கவனம் பெற்றார்.

கீர்த்தி ஷெட்டி
இந்நிலையில் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை இந்த வருட தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கீர்த்தி ஷெட்டி
இப்படத்தை தொடர்ந்து 'மண்டேலா' திரைப்படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகிகளின் தேர்வு நடைப்பெற்றுவருவதாகவும் இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி ஷெட்டியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு கால்ஷீட் வழங்க வாய்ப்புள்ளது.






