சீதையாக நடிக்கும் கீர்த்தி சனோனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' .இந்த திரைப்படம் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன்
Published on

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இணையத்தில் கீர்த்தி சனோன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் கீர்த்தி சனோன் சீதையாக நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

இது பல நிகழ்ச்சிகளில் அவர் யதார்த்தமாக கலந்து கொண்டது. அதற்கு இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் கீர்த்தியை விட படக்குழு இன்னும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு முன் வந்த எதிர்ப்புகளை சமாளித்து ரூ.100 கோடி கூடுதலாக செலவு செய்து ரிலீஸ் செய்யும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்காது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com