என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை' இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இன்று இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டரை ஒன்றை வெளியிட்டுள்ளது.


    • நடிகை தன்யா ஹோப், சந்தானத்திற்கு ஜோடியாக கிக் படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பில் தற்போது வெப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.

    தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப். இப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்திலும், சந்தானத்திற்கு ஜோடியாக கிக் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது வெப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.


    திரைப்படங்களில் நடித்து வந்த தான்யா ஹோப் தற்போது 'லேபிள்' என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் தொடரை அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கி உள்ளார். மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.


    இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வெப் தொடர் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'நீ வாடி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர் - ராஷ்மிகா ரொமான்ஸில் அசத்தும் இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’வட சென்னை’.
    • இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வட சென்னை'. இந்த படத்தில் தனுஷ், இயக்குனர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ் தயாரிந்திருந்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.


    வட சென்னை பகுதியில் உள்ள மக்களை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், 'வட சென்னை' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், சென்னை கமலா திரையரங்கில் வரும் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாகவும் இதுவரை இப்படத்திற்காக 4,150 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'லியோ' திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைபை கிளப்பியது.


    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "ரஜினியின் 171-வது படத்தின் கதையை விஜய்யிடம் கூறினேன். கதையை கேட்ட விஜய் வெறும் 10 நிமிடம் சொல்லும் எந்த கதையும் எனக்கு இதுவரை பிடித்ததில்லை. இது பயங்கரமா இருக்கு டா" என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கிறார்.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷாலிடம் அக்கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம மக்கள் கூறினர். இதையடுத்து, விஷால் லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் எந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் சுமார் 60 அடி ஆழம் போர் அமைத்து, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுத்துள்ளார்.


    இப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கிராம மக்களிடம் பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக கூறி சென்றுள்ளார். நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து குமாரசக்கணபுரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சென்னம்மாள் கூறியதாவது, நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்த போது என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று விஷால் கேட்டார்.


    நான் எனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில் தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கூறினேன். அதுமட்டுமன்றி, நடிகர் விஷாலை பார்த்து 'நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.. கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று கேட்டேன்.'கல்யாணம் பண்ணிக் கிட்டா நான் படப்பிடிப்புக்கு வந்துருவேன்.. மனைவி வீட்ல தனியா இருக்கணுமே' என்றார். மேலும், என்னை சென்னைக்கு வந்து விடுமாறும் கூறினார் என சென்னம்மாள் தெரிவித்துள்ளார். 

    • லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • லியோ படத்தின் டிரைலர் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், லியோ படத்தின் மூன்றாவது பாடல் "அன்பெனும்" நாளை (அக்டோபர் 11) வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

    • ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
    • இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

    ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி இந்த படத்திற்கு கிங்ஸ்டன் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

    இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

    • விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 13-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


    • மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி.
    • இவர் தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த சுரேஷ்கோபி, கொச்சியில் ஒரு விழாவில் பங்கேற்றார்.


    அப்போது அவர், மறு பிறவியில் நம்பிக்கை கொண்டவன் நான். எனது மறு பிறவியில் தந்திரி குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். பூணூல் அணியும் சமூகத்தில் பிறந்து சபரிமலை தந்திரியாக வேண்டும். சபரிமலையில் வெளியில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்தால் மட்டும் போதாது. கோவிலுக்குள் சென்று அமர்ந்து பூஜை செய்து தரிசிக்க வேண்டும். அய்யப்பனை கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன் என்றார்.

    சுரேஷ் கோபி இதற்கு முன்பு ஒரு முறை இதுபோல பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்பத்’.
    • இப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்பத்'. டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பூஜா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குட் கோ நிறுவனம் சார்பில் வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.


    இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'கண்பத்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும் பார்வையாளர்களையும் முழுமையாக பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் உள்ள VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.




    • மணீஷ் சர்மா இயக்கியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'டைகர் 3' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கத்ரீனாவின் சோலோ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


    டைகர் 3 போஸ்டர்

    இது குறித்து கத்ரீனா கூறியதாவது,  ஜோயா, ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவள் , அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக ஒவ்வொரு முறையும் முன் வருகிறார் .

    ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸில் ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம் மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர் 3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல் ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.

    எப்போதும் ஆக்ஷன் செய்வது உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும் போல் ஆக்ஷன் வகையின் ரசிகை . அதனால், ஜோயாவாக நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான வேடம் ஏற்றேன் சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

    ×