என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
    • விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.800 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

    நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.800 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது. பணம் இருந்தும் வேண்டும் என்றே தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விஷால் தராமல் இருப்பதாக லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதியாவது செலுத்த உத்தரவிட வேண்டும் என்று லைகா தரப்பிக்ல் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    விஷால் தரப்பு வழக்கறிஞர் லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய நீதிபதி ஏன் இன்னும் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பில் பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் ப்ரீக்வலாக உருவாக உள்ளது.

    கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.


    ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இயக்குனர் ரிஷப் ஷெட்டி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    • மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் திவ்ய பிரபா.
    • இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

    பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் 'கயல்', 'கோடியில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை திவ்ய பிரபா விமானத்தில் தனக்கு பாலியல் அச்சுறுத்தல் நடைபெற்றதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பிய போது 12 சி இருக்கையில் மதுபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் 12 பி இருக்கையில் தனது அருகில் அமர்ந்துகொண்டு காரணமே இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொண்டார்.


    இதுபற்றி விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்தபோது, அவர் எனது இடத்தை மட்டுமே மாற்றி கொடுத்தாரே தவிர எனக்கு தொல்லை கொடுத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.



    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

    லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெற்று வருகிறது. பணகுடியில் உள்ள தள ஓடு தயாரிக்கும் சூளையில் படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதன் 3-வது நாள் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. இதனையொட்டி கடந்த 2 நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் வருகையை எதிர்பார்த்து பணகுடி மங்கம்மாள் சாலையில் ரசிகர்கள் திரண்டு நின்று உற்சாகமாக தலைவா....தலைவா... என கோஷமிட்டனர்.

    படப்பிடிப்பின் தொடக்க நாளான நேற்று முன்தினம், வெள்ளை நிற உடையில் வந்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை கண்டதும் காரை நிறுத்தி காரில் அமர்ந்தபடி கையசைத்தும், ரசிர்களுக்கு கை கொடுத்தும் சென்றார்.


    நேற்று 2-ம் நாள் படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் காரில் வெளியேறியபோது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்தவுடன் திறந்த வெளி காரில் எழுந்து நின்று வணக்கம் செலுத்தி கை அசைத்தபடி சென்றார். ரசிகர்கள் உற்சாகத்துடன் ரஜினிகாந்த் செல்வதை செல்போனில் படம் எடுத்தனர்.

    முன்னதாக அவர் படப்பிடிப்புக்கு வந்தபோது சாக்லெட் நிற சட்டை அணிந்தபடி தலையில் விக் வைத்து புதிய கெட்டப்பில் நடிப்பதற்காக வந்தார். அவர் காரை விட்டு இறங்கி சென்றபோது ரசிகர்கள் திரண்டு புகைப்படம் எடுத்தனர். பின்னர் அவர் கையை அசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இன்று 3-வது நாளாக படப்பிடிப்பு தொடர்வது மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'.
    • இப்படம் 19-ஆம் தேதி வெளியாகுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.


    திருப்பதியில் லியோ படக்குழு

    இந்நிலையில், 'லியோ' படம் வெற்றி பெறுவதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பாத யாத்திரையாக திருப்பதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், படம் நன்றாக வந்துள்ளதாகவும் 'லியோ' படம் வெளியான பிறகே ரஜினியின் 170-வது படத்திற்கு ஸ்கிரிப்ட்களை தயார் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

    • லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • லியோ படத்தின் டிரைலர் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், லியோ படத்தின் "அன்பெனும்" பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் மற்றும் திரிஷா இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் அன்பெனும் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    • லதா ரஜினிகாந்த் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    • லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை தயாரித்ததற்காக தனியார் விளம்பர நிறுவனத்திடம் ரூ. 6.2 கோடியை கடன் பெற்றிருந்தார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பமிட்டிருந்தார். கடன் பெற்ற பணத்தை தனியார் நிறுவனத்திற்கு அளிக்கவில்லை என தெரிவித்து தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களூர் மாநகரம் 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போலீசார் லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்களை தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார். இதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் 196 , 199 , 420 ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் திரித்துத் தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.

    இந்த உத்தரவிற்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்திற்கு எதிரான மோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு அனுமதியளித்திருப்பதுடன் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, 'லியோ' படம் வெளியாகும் தினமான 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    • சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    டைகர் 3 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'டைகர் 3' திரைப்படத்தின் டிரைலர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்த நடிகர் பாபு கடந்த மாதம் காலமானார்.
    • இவரது உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.


    அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

    இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு குதித்த போது டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். இதையடுத்து கடந்த மாதம் நடிகர் பாபு காலமானார். இவரது உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


    இந்நிலையில், பாபுவின் தாயார் பிரேமா மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இவர் முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேமா மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராஜாராமின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதர்வா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.


    இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    டி.என்.ஏ போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு படக்குழு 'டி.என்.ஏ' என தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×