மீண்டும் வெளியாகும் மார்க் ஆண்டனி

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் வெளியாகும் மார்க் ஆண்டனி
Published on

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மார்க் ஆண்டனி போஸ்டர்

இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 13-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com