என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறை ஆகும்.
    • இந்திய திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்ட படம்.

    'நாகேஷ் திரையரங்கம்' என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்த டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது, முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை தயாரித்துள்ளது.

    'சார்லி சாப்ளின்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு 'ஜாலியோ ஜிம்கானா' என்ற தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     


    இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் நடந்துள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ளது.

    படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது, "மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏனென்றால் படம் கதையாகவும் விஷுவலாகவும் அவ்வளவு ரிச் ஆக வந்துள்ளது. பட்ஜெட் ஆகவும் இது பெரியபடம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார்."

    "படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது."

    "பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி, யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்," என்றார்.

    • புள்ளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
    • பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம்.

    பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி வருகிறார்.


    புள்ளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம். சேதம் அதிகமாக உள்ளது. சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியவில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

    • பைட் கிளப் படத்தில் விஜய்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 15) வெளியான பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     


    இந்த நிலையில், பைட் கிளப் படம் வெளியான மூன்று நாட்களில் ரூ. 5 கோடியே 25 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
    • அட்வான்ஸ் புக்கிங் மூலம் முன்பதிவு விரைவாக நிறைந்து வருகிறது.

    ராஜ்குமார் ஹிரானியின் 'டங்கி' திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் தருணத்தில் இப்படத்தை காண்பதற்கான ரசிகர்களின் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்த படத்தில் ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர். உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் 'டங்கி'யில் நடித்துள்ளனர்

    உலகம் முழுவதும் இந்த படத்தை காண முன்பதிவு தொடங்கியுள்ளது. அட்வான்ஸ் புக்கிங் மூலம் முன்பதிவு விரைவாக நிறைந்து வருகிறது.

    'டங்கி' படத்தின் முன்பதிவுகள் வெளிநாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்து வருகிறது.

    இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

    இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள்.

    இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    • சபரீஷ் நந்தா தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • இந்த படத்திற்கு இந்திரா என பெயரிடப்பட்டுள்ளது.

    ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு "இந்திரா" என்று பெயரிட்டுள்ளனர்.

     


    நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.

    மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    • இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
    • லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.




    இந்த நிலையில், லால் சலாம் படத்தின் "தேர் திருவிழா" என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், தேர் திருவிழா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. 



    • டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
    • இந்த படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது.

    இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது டிமான்டி காலனி 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

    விரைவில் வெளியாக இருக்கும் டிமான்டி காலனி 2 படம் குறித்து டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., "இயக்குனர் அஜய்-யிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை."

     


    "இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக, நான் வேறு பல படங்களை செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்."

    "தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சி.ஜி. எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.


     

    இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • உணர்வுப்பூர்வமாக நிறைய இடத்தில் டயலாக் பேசினேன்.

    ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "மதிமாறன்". இந்த படத்திற்கான பணிகள் நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இது தொடர்பான விழாவில் கலந்து கொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், "இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது."

     


    "உணர்வுப்பூர்வமாக நிறைய இடத்தில் டயலாக் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான். அதற்காகக் கவலையே படக்கூடாது."

    "இவனா என் மகளாக நடித்திருக்கிறார். என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    இப்படத்தில் இவானா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

    • திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை தன்னுடன் இணைத்து கொண்டார்
    • தனது பதிலுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை இணைத்து பதிவிட்டார் சமந்தா

    தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.

    4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya).

    சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.

    ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

    சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

    2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது ஒரு பயனர் அவரிடம், "மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?" என கேட்டார்.

    அதற்கு சமந்தா, "அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.

    சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி பிரமாண்ட வெற்றி பெற்றது.
    • ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

    திரைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் சமீபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

     


    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

    • டிமான்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
    • டிமான்டி காலனி 2 படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    'டிமான்டி காலனி' படத்தின் முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

     


    சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    ×