என் மலர்
சினிமா செய்திகள்
- இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது.
- வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், நான்கு ஆண்டுகள் ஆனாலும் முடியாது என பிறகுதான் தெரிந்தது. இதன் காரணமாக செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது," என்று தெரிவித்தார்.
விடுதலை 1 படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரஜினி உள்பட திரை பிரிபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Thankyou @iamharishkalyan anna for the token of love which is unexpected?. As Bracelet is my favorite accessory to wear, you have remembered that and gifted that to me is so overwhelming? Thank you for your delightful gift. And the immense love that makes me feel special..❤️ pic.twitter.com/6pHX76BxBp
— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) December 15, 2023
இந்நிலையில், பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமாருக்கு அப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் அணிவதில் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி. மேலும் என்னை ஸ்பெஷலாக உணரவைக்கும் அபாரமான அன்பு... என கூறியுள்ளார்.
This is just the beginning of many more successes & love that you're going to receive Ram ❤️? https://t.co/G0fFcEXwfP
— Harish Kalyan (@iamharishkalyan) December 16, 2023
இதற்கு ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல வெற்றிகள் மற்றும் அன்புகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.
- ‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதிபகவன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
- கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னாடி 21 ஆண்டுகளை கடந்துள்ளது.
2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதிபகவன்' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் 21 ஆண்டுகளை கடந்துள்ளது. சில திரைப்படங்களிலும் அமீர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த இயக்குனர் அமீர், மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது.
- ஃபைட்டர் படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார்.
இந்தியாவின் நடன சூப்பர் ஸ்டார் என்று பலராலும் அழைக்கப்படுபவர் ஹிரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் தற்போது ஃபைட்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் 'ஷேர் குல் கயே' என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடன அசைவுகள் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.
நடன அசைவுகளில் தனக்கு நிகர் இல்லை என்ற அளவுக்கு ஆடும் திறன் கொண்ட ஹிரித்திக் ரோஷன், 'ஷேர் குல் கயே' பாடலிலும் தனக்கே உரிய பாணியில் நடனத்தை மிரட்டியுள்ளார். ஹிரித்திக் திரையுலகில் 'கஹோ நா ப்யார் ஹே' 'கபி குஷி கபீ கம்', 'தூம் 2' போன்ற படங்களில் ஆடியதை யாரும் இன்றளவும் மறக்க முடியாத வகையில் உள்ளது. இந்த வரிசையில் ஃபைட்டர் படமும் இணைந்து இருக்கிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் போர் விமானியாக ஹிரித்திக் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்திற்கு ஷாம் ஷெர் பதனியா என்கிற பேட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹிரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஃபைட்டர் படத்தின் டீசர்- அதிரடி ஆக்ஷன் மூலம் ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் 'ஷேர் குல் கயே' பாடலில் ஹிரித்திக் நடனத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- பிரணாவ் ஜூவல்லரி மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என தகவல்.
- பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், இந்த மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என மதன் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரணவ் நகைக்கடை மோசடி வழக்குக்கும் பிரகாஷ் ராஜூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என புலனாய்வுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் புரியாதவர்களுக்கு..
முக்கியச் செய்திகள்:- புலனாய்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ்நாட்டின் பிரணவ் நகைக்கடை மோசடியில் ஈடுபடவில்லை..
என்னை நம்பி எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி..
இவ்வாறு அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

- குருதத்தா கனிகா இயக்கும் திரைப்படம் 'கரவாலி'.
- அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
'அம்பி நீங்கே வயசாய்தோ' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் அடைந்த குருதத்தா கனிகா இயக்கும் திரைப்படம் 'கரவாலி'. குருதத்தா கனிகா பிலிம்ஸ் பேனர் சார்பில் விகே பிலிம்ஸ் உடன் இணைந்து குருதத்தா கனிகா தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜ்வல் தேவராஜ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
சச்சின் பஸ்ரூர் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்நிலையில் 'கரவாலி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் பிரஜ்வல் தேவராஜ் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
நமது கலாச்சாரம் மற்றும் மொழிகளில் விளைந்து வேரூன்றிய கதைகளை மக்களுக்கு சொல்வதற்காகவே தாம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக குருதத்தா கனிகா கூறினார்.
- பிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூட் நம்பர் 17’.
- இந்த படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார்.
14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரூட் நம்பர் 17'. இந்த படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது, நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரசாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.
ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன்.

அதேபோல இந்த மழை வெள்ள காலத்தில் அறந்தாங்கி நிஷா, கே பி ஒய் பாலா ஆகியோர் செய்த உதவிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருமே பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள். உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்தவர்களை கொண்டாட வேண்டும் அவர்களும் ஹீரோதான். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது என்று கூறினார்.
- நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
- வடிவேலு ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடித்து பாராட்டை பெற்றார். தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று… pic.twitter.com/yDYv9GvrZL
— Udhay (@Udhaystalin) December 15, 2023
- ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
- இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.
வளர்ந்து வரும் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் 'லெஜண்ட்' சரவணன் கலந்து கொண்டார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில், "என்றென்றும் நம் நினைவில் வாழும் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
— Legend Saravanan (@yoursthelegend) December 15, 2023
நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை… pic.twitter.com/IdqW2wJmxN
- இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சப்தம்'.
- இப்படம் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சப்தம்'. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

'7ஜி ஃபிலிம்ஸ்' சிவா மற்றும் இயக்குனர் அறிவழகனின் 'ஆல்பா ஃப்ரேம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படம் ஹாரர், திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
'சப்தம்' திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

சப்தம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய் 2 கோடி செலவில்,120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரமாண்ட செட் உருவாக்கி படம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 'சப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்கு முன்பு அறிவழகன் - ஆதி காம்போவில் 'ஈரம்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘எல்.ஐ.சி’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருந்தது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் என்று இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'எல்.ஐ.சி' என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் 'எல்.ஐ.சி' என்கிற பெயரை 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால், 'எல்.ஐ.சி' என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.

அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.
'எல்.ஐ.சி' என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார்.
- தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்தி நடிகை தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தீபிகா படுகோனே அவரது தங்கை அனிஷா படுகோனே ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 56,049 பேர் தரிசனம் செய்தனர். 26,748 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






