இயக்குனர் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய சூர்யா.. வைரலாகும் புகைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி பிரமாண்ட வெற்றி பெற்றது. ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இயக்குனர் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய சூர்யா.. வைரலாகும் புகைப்படம்
Published on

திரைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் சமீபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com