என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி.
    • இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

    பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில், இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார்.



    அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட சென்றபோது, இயக்குனர் மாரி செல்வராஜூம் உடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகின. மேலும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் நடிகர் வடிவேலு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு, பள்ளம் எங்கு இருக்கிறது என அவருக்குத் தான் தெரியும். ஏன் போகக்கூடாதா? அவர் ஊரில் அவர் போகாமல், வேறு யார் போவது? அவர் என்ன அமெரிக்காவில் இருந்து வந்திருக்காரா?," என்று தெரிவித்தார். 

    • புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?
    • படம் படைப்பாளிகள் கையில் இல்லை.

    தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் "அரணம்". ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

    இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புசமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய பாடலிசிரியர் பிரியன், "அரணம் ஒரு பெரும் தவம். இந்தப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம். 20 வருடம் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால், புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?".

     


    "ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான். படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை, கார்பரேட் கையில் இருக்கிறது. நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சின்னபடங்களை எடுத்து விடுகிறார்கள். ஆயிரம் தியேட்டரிலும் ஒரே படம் தான் ஓடுகிறது," என்று தெரிவித்தார்.

    பாடலாசிரியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன் , கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார்.

    • ஷாருக், சல்மான், அமீர்கான் ஆகியோரை குறிப்பிட முடியும்.
    • சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதி கருத்து.

    திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கும் வழக்கம் இந்தியாவில் உண்டு. தமிழ் மட்டுமின்றி தேசிய அளவில் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் அறியப்படுகிறார். இவர் தவிர மலையாள சூப்பர்ஸ்டார்களாக மம்முட்டி, மோகன்லால், இந்தியில் ஷாருக், சல்மான், அமீர்கான் ஆகியோரை குறிப்பிட முடியும்.

    சமீபத்தில் தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற தலைப்பு மிகப்பெரும் விவாதமாக மாறியது. இது தொடர்பான சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

     


    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "சூப்பர்ஸ்டார்டம் யாருக்கும், எதுவும் தராது. அது நேர விரயம் மட்டும் தான். சூப்பர்ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் யாருக்காவது பயன் ஏற்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை."

    "சூப்பர்ஸ்டார் பட்டம் இமேஜை கொடுக்கிறதா என்றும் தெரியவில்லை. என்னை பொருத்தவரை சூப்பர்ஸ்டார் என்பதை விட சூப்பர் ஆக்டர் என்று சொல்வதே எனக்கு மகிழ்ச்சி. மலையாளத்தின் மூன்று சூப்பர் ஆக்டர்களாக பகத் பாசில், ஆசிப், ரீமா கல்லிங்கல் ஆகியோர் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

    • மெரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
    • இந்த படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது.

    கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி  இருக்கிறது.

    ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்துள்ளனர்.

     


    இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்து இருக்கிறார்கள்.

    இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களம், கொண்டாட்டம் மிகுந்த கிறிஸ்மசை மையமாகக் கொண்டிருப்பதால் 'மெரி கிறிஸ்மஸ்' என்று படத்திற்கு பெயரிட்டிருக்கிறது.



    • அயலான் படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அயலான் ரிலீசாகிறது.

    ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12-ம் தேதி அயலான் படம் ரிலீசாக இருக்கிறது.

     


    இந்த நிலையில், 'அயலான்' படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அயலா அயலா என துவங்கும் இந்த பாடலை விவேக் எழுத, நரேஷ் ஐயர் மற்றும் ரிடே பாடியுள்ளனர். 



    • கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    • படத்தின் தலைப்பு Boss (or) Puzzle என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் தலைப்பு Boss (or) Puzzle என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். ஆனால் தளபதி 68 படத்தின் டைட்டில் Boss (or) Puzzle கிடையாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

    • படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தை உலகம் முழுவதும் உள்ள சில திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் யோசனையில் உள்ளதால் அதன் வெளியீட்டு தேதி ஜனவரி 26-இல் இருந்து தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 'தங்கலான்' திரையரங்குகளில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

    விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண். தற்போது தனது ஐந்தாவது படமான 'சியான் 62' படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படகுகள் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வந்தார்.
    • வெள்ள மீட்பு பணிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி செய்தார். படகுகள் மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று மக்களை பாதுகாப்பாக மீட்டு வந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், தனது சொந்த ஊர் மற்றும் பக்கத்து கிராமங்களில் வெள்ள மீட்பு பணிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டதை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர்.

    அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது" என்று மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதியின் புகைப்படத்துடன் கூறியுள்ளார்.

    • இந்த படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது.
    • இந்த படத்தில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன் நடித்துள்ளனர்.

    சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் மற்றும் சான்வே மேகனா நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன், தனம், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் இணைந்து நடிக்கின்றனர்.

    மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

     


    ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும். இந்த திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. படத்தின் கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

    • சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
    • இந்த படத்தை என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற வால்டர் மற்றும் பாரிஸ் ஜெயராஜ் போன்ற வெற்றிப்படங்களை 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் தயாரித்திருந்தார். இவர் தற்போது என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி இருக்கும் 'யாவரும் வல்லவரே' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

     


    படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், பிரபு திலக், "வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து எங்களின் "யாவரும் வல்லவரே" படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது."

    "இயக்குநர் என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்கள் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்," என்று தெரிவித்தார்.

    • தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறை ஆகும்.
    • இந்திய திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களம் கொண்ட படம்.

    'நாகேஷ் திரையரங்கம்' என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்த டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது, முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை தயாரித்துள்ளது.

    'சார்லி சாப்ளின்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு 'ஜாலியோ ஜிம்கானா' என்ற தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     


    இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் நடந்துள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ளது.

    படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது, "மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏனென்றால் படம் கதையாகவும் விஷுவலாகவும் அவ்வளவு ரிச் ஆக வந்துள்ளது. பட்ஜெட் ஆகவும் இது பெரியபடம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார்."

    "படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது."

    "பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி, யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்," என்றார்.

    • புள்ளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
    • பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம்.

    பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி வருகிறார்.


    புள்ளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம். சேதம் அதிகமாக உள்ளது. சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியவில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

    ×