என் மலர்
சினிமா செய்திகள்
- தனுஷின் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.
இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக நடிக்கிறார். அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- 2012ல் அறிமுகமான டொவினோ பல மலையாள திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்
- "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்
தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
சில நேரங்களில், ஒரு சில ரசிகர்கள் வினோதமான கோரிக்கைகளை தங்களுக்கு பிடித்தமான திரைப்பிரபலங்களுக்கு வைப்பதும், அதற்கு அந்த பிரபலங்கள் பதிலளிப்பதும், இணையத்தில் சுவாரஸ்யமாக செய்திகளாக பரவி வருகின்றன.
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ் (Tovino Thomas). 2012ல் திரையுலகில் அறிமுகமான டொவினோ பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

டொவினோ தாமசிற்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்து ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அந்த ரசிகர், "எனது வீடியோவை டொவினோ தாமஸ் பார்த்து விட்டு, அதற்கு கமென்ட் (comment) பதிவிட்ட பிறகுதான் நான் எனது தேர்விற்கு படிக்க தொடங்குவேன்" என பதிவிட்டு, டொவினோ தாமசின் ஐடி-யையும் டேக் (tag) செய்திருந்தார்.
இந்த பதிவை கண்ட டொவினோ தாமஸ், "போய் படி மகனே" என பதிலளித்தார்.
இதே போல் ஒரு ரசிகை, நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das) பெயரை குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார்.

2012ல் "பெருமான்" எனும் தமிழ் திரில்லர் திரைப்படத்தில் அறிமுகமாகி "கைதி", "மாஸ்டர்" உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் அர்ஜுன் தாஸ்.

அவருக்கு அந்த ரசிகை, "அர்ஜுன் தாஸ் எனது வீடியோவை பார்த்து, அது குறித்து கமென்ட் அளித்த பிறகுதான் நான் நீட் முதுநிலை (NEET PG) தேர்விற்கு தயாராக தொடங்குவேன்" என பதிவிட்டு அர்ஜுன் தாஸ் ஐடி-யையும் டேக் செய்திருந்தார்.
இந்த பதிவை கண்ட அர்ஜுன் தாஸ், "டாக்டர், நீங்கள் முதுநிலை தேர்வை வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்ததும் எனக்கு ட்ரீட் (treat) வைக்க வேண்டும். (விளையாட்டிற்கு கூறினேன்). நீங்கள் தேர்வில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தேர்வில் வெல்லுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்" என பதிலளித்தார்.
இரண்டு வெவ்வேறு ரசிகர்களின் வித்தியாசமான கோரிக்கைகளும், திரைப்பிரபலங்களின் பதில்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதித்து வருகின்றனர்.
- ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்.
- அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர்.
ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இந்த படத்தின் நாயகன் தீரஜ்ஜை எனக்கு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன்."
"எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்."
"தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான்."
- இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார்.
'கார்த்தியின் 27'வது படமான இந்த படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
மேலும், பூஜை வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்று மாற்றினேன்.
- இது கற்பனை என்கின்ற ஒரு கார்டைப் போட்டேன்.
நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, "ஒரு விஷயத்தை சொல்கிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், வளைந்து போக கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி பயன்படுத்தினேன்."
"வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும், ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்து கொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே," என்று தெரிவித்தார்.
- தனுஷ் நடிக்கும் அவரது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி வருகிறார்
- இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்
ராயன் படத்தின் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தனுஷ் நடிக்கும் அவரது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
@officialdushara From the world of #Raayan pic.twitter.com/vpSc2gfGZI
— Dhanush (@dhanushkraja) February 24, 2024
- இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
- இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

தமிழ் மாட்டு இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்
இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "நண்பகல் நேரம்" என்ற இந்த பாடல் வைரலாகி வருகிறது.
- ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும்
- சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது. பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பிருத்விராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குநர் எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தில் லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்றுள்ள "ஸ்டார் இன் தி மேக்கிங்" பாடலின் ஆர்கெஸ்ட்ரா வெர்ஷனை படக்குழு வெளியிட்டு உள்ளது.
- ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன்.
- இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம்.
திரையுலகில் முன்னணி நடிகர்கள் தங்களின் பிறந்த நாள் முன்னிட்டு ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம்.
நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
கடந்த முறை நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த அவரது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இது ராகவா லாரன்ஸ்-க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர் ரசிகர்களுக்காக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வணக்கம் நண்பர்களே ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டார். மிகவும் மனவேதனையாக இருந்தது.
அன்று, என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அவர்களுக்காக பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்துவேன்.
நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது. நாளை சந்திப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை வைசாக் இயக்குகிறார்.
- இந்த படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைக்கிறார்.
மம்மூட்டி நடிக்கும் புதிய படம் "டர்போ". வைசாக் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மிதுன் மேனுயெல் தாமஸ் எழுதியிருக்கும் டர்போ படத்தில் அஞ்சனா, ஜெயபிரகாஷ், சுனில் மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய போஸ்டரில் மம்மூட்டி காவல் நிலையத்தில் கைதி போன்று அமர்ந்து இருக்கிறார்.
டர்போ படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைக்கிறார். இந்த படத்தை மம்மூட்டியின் சொந்த நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரிக்கிறது.
மம்மூட்டி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான பிரம்மயுகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலில் இந்த படம் நான்கு நாட்களில் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக குவித்தது.
- பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
- ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "ஜோஷ்வா- இமை போல் காக்க" பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மார்ச் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கடந்த வாரம், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
இந்நிலையில், ஜோஷ்வா- இமை போல் காக்க திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீஸ் ஆனது.






