என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
    • எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி நடிக்கின்றனர்.

    தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. 

    அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

    இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரலட்சுமியின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    • விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    திரை அரங்குகளில் ஏற்கனவே வெளியாகி, பின் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் என்ற பெருமையை சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

     


    மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இந்த திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
    • இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் படமானது மே மாதத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

    கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

    அதன்பின்னர், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கினார்.

    இப்படத்தை பரியேறும் பெருமாள், ரைட்டர், ப்ளூ ஸ்டார் போன்ற பல படங்களை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் பெற்று வந்தார். ஆனால், திடீரென்று இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை தொடங்கினார்.

    இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1990-காலக்கட்டத்தில் உருவாகும் இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • கசல் கவிதைகளில் காதலின் மகத்துவம் ஆழமான சொற்களால் வெளியிடப்படும்
    • 2006ல் இந்திய அரசு பங்கஜ் உதாசிற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது

    அரேபிய நாடுகளில் 7-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவானது கசல் (ghazal) எனும் கவிதை மரபு.

    கசல் கவிதைகளில் பெரும்பாலும் காதலின் மகத்துவம், காதலர்களின் பிரிவு மற்றும் அதனால் ஏற்படும் சோகம் ஆகியவை ஆழமான சொற்றொடர்களை கொண்டு படைக்கப்பட்டிருக்கும்.

    நீண்ட கால பயிற்சிக்கு பிறகே ஒருவர் கசல் பாடகராக உருவாக முடியும்.

    12-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலும் அறிமுகமாகி தற்போது வரை பிரபலமாக உள்ள கசல் பாடல்களுக்கும், கசல் பாடகர்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

    வட இந்தியாவில் புகழ் பெற்ற கசல் பாடகராக திகழ்ந்தவர், பங்கஜ் உதாஸ் (Pankaj Udhas).

    1951 மே 17 அன்று குஜராத் மாநில ஜெத்பூரில் பிறந்த பங்கஜ் உதாஸ், 1980ல் "ஆஹத்" எனும் ஆல்பம் வெளியிட்டு புகழ் பெற்றார்.

    தொடர்ச்சியாக பல ஆல்பங்கள் மூலமாகவும் கசல் கச்சேரிகள் மூலமாகவும் புகழ் பெற்று வந்த அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர்.


    1986ல் வெளியான "நாம்" எனும் இந்தி திரைப்படத்தில் "சிட்டி ஆயி ஹை" (கடிதம் வந்துள்ளது) எனும் பாடல் மூலம் திரைத்துறையிலும் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.

    தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் பின்னணி பாடகராகவும் ரசிகர்களை ஈர்த்தார்.

    சல்மான்கான்-சஞ்சய் தத் இணைந்து நடித்த "சாஜன்" (Saajan) மற்றும் அக்ஷய்குமார்-சுனில் ஷெட்டி இணைந்து நடித்த "மொஹ்ரா" (Mohraa) போன்ற வெற்றிப்படங்களில் பாடியுள்ளார்.

    2006ல் இந்திய அரசு பங்கஜ் உதாசிற்கு பத்மஸ்ரீ (Padma Shri) பட்டம் வழங்கி கவுரவித்தது.

    பங்கஜ் உதாஸ் இன்று காலை 11:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.

    பங்கஜ் உதாஸ் காலமான செய்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


    • சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு.
    • சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.

    இவர், அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனத்தில் ரூ.1.70 கோடி கடன் பெற்ற நிலையில், திரும்ப அளிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.
    • ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    'கேப்டன் மார்வல்' படத்தில் காரெல் டென்வர்ஸ்க்கு தந்தையாக நடித்தவர் கென்னெத் மிட்ச்செல் (49).

    இவர் 5 வருடங்களுக்கும் மேலாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளெரோசிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார்.

    இந்நிலையில், கென்னெத் மிட்சசெல் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார்.

    இவரின் மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
    • என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன்.

    பிரபல நடிகரான சிவக்குமார் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் மட்டுமின்றி யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பல்வேறு புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய விழாக்களில் சிறப்புரையாற்றி வருகிறார்.

    அந்த வகையில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன் என்று பழ.கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். விழா முடிந்து சிவக்குமார் கீழே இறங்கியபோது முதியவர் ஒருவர் ஆர்வத்துடன் அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரிடம் இருந்த சால்வையை சிவக்குமார் பறித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் தன்னோடு செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை சிவக்குமார் பறித்து எறிந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது சிவக்குமார் சால்வையை பறித்து எறிந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பும் வசூலிலும் சாதனையும் பெறுகிறது.

    அதேபோல் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஓரளவு வசூல் தான் கிடைத்துள்ளது. இதனால் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்நிலையில், தற்போது மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


    அதனடிப்படையில் அண்ணாமலை, யாரடி நீ மோகினி, வாரணம் ஆயிரம், பில்லா, திருமலை, வாலி, பிரேமம், காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
    • முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

    'பிரம்மயுகம்' கடந்த 15- ந்தேதி மலையாள மொழியில் வெளிவந்த 'திகில்' படம். இப்படத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், பரதன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்திருந்தார்.

    நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.27 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. இந்த படம் அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.



    இந்த படம் மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் 10 நாட்களில் இந்த படம் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

    • நடிகர் விஜய்-யின் சினிமா கேரியர்களில் சிறந்ததாக இன்றளவும் பேசப்படும் படமாக கில்லி உள்ளது.
    • ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து மீண்டும் கில்லி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.

    நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'.

    இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். வித்யாசாகர் இசை அமைப்பில் படத்தின் அனைத்து பாடல்களும் மாஸ் 'ஹிட்'. இந்த படத்தில் பிரகாஷ்ராஜின் வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.


    நடிகர் விஜய்-யின் சினிமா கேரியர்களில் சிறந்ததாக இன்றளவும் பேசப்படும் படமாக கில்லி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விஜய் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து மீண்டும் அந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.


    'கில்லி' படம் வருகிற ஏப்ரல் 27- ந்தேதி மீண்டும் 'ரீ ரிலீஸ்'(மறு வெளியீடு) செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறையில் 'கில்லி' வெளியாவது விஜய் ரசிகர்களையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆனேன்.
    • சினிமாவில் யாரும் நண்பர்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.

    தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், தென்னவன், அரசு, வின்னர், நியூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கிரண் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

    கிரண் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு மூன்று திருமணம் ஆகிவிட்டது என்றும், மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் கண்டபடி பேசுகிறார்கள்.

    தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆனேன். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாக நினைத்தேன். இதனால் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படங்களை கூட தவிர்க்கும் நிலைக்கு ஆளானேன்.

    ஆனால் அந்த காதல் கைகூடாமல் போக, பட வாய்ப்புகளும் குறைந்தது. எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக நெருங்கி பழகிய நண்பர்களே இரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை அழைத்தார்கள். அப்போதுதான் சினிமாவில் யாரும் நண்பர்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.

    நல்லவர்கள் என்று பழகிய அத்தனை பேரும் என்னை படுக்கைக்கு அழைத்தனர். இதனால் சற்று அதிருப்தி அடைந்தேன். எத்தனையோ நடிகைகள் பிகினி அணியும்போது, என்னை மட்டும் ஆபாச நடிகை என்று முத்திரை குத்த தொடங்கினர். பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மைதான். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் அதிகம் பேச விரும்பவில்லை'' என்றார்.

    • ₹3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா
    • 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்

    தங்க முலாம் பூசப்பட்ட ₹3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

    3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்.

    தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து 'செகண்ட் டோஸ்' என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார். இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி பதிவிட்டுள்ளார்.

    "என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா உண்மையிலேயே உலகின் மிக அழகான பெண், நான் அதை பல முறை கூறியிருக்கிறேன். அவள் மிகவும் அழகான பெண், அதனால்தான், நான் 3 கோடி மதிப்பிலான இந்த கேக்கை அவளுக்காக வாங்க முடிவு செய்தேன் என்று யோ யோ ஹனி சிங் தெரிவித்துள்ளார்.


    ×