ரீ-ரிலீஸ் செய்யப்படும் 'கிளாசிக்' படங்கள்

விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ரீ-ரிலீஸ் செய்யப்படும் 'கிளாசிக்' படங்கள்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பும் வசூலிலும் சாதனையும் பெறுகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஓரளவு வசூல் தான் கிடைத்துள்ளது. இதனால் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் அண்ணாமலை, யாரடி நீ மோகினி, வாரணம் ஆயிரம், பில்லா, திருமலை, வாலி, பிரேமம், காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com