search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ghazal singer"

    • கசல் கவிதைகளில் காதலின் மகத்துவம் ஆழமான சொற்களால் வெளியிடப்படும்
    • 2006ல் இந்திய அரசு பங்கஜ் உதாசிற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது

    அரேபிய நாடுகளில் 7-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவானது கசல் (ghazal) எனும் கவிதை மரபு.

    கசல் கவிதைகளில் பெரும்பாலும் காதலின் மகத்துவம், காதலர்களின் பிரிவு மற்றும் அதனால் ஏற்படும் சோகம் ஆகியவை ஆழமான சொற்றொடர்களை கொண்டு படைக்கப்பட்டிருக்கும்.

    நீண்ட கால பயிற்சிக்கு பிறகே ஒருவர் கசல் பாடகராக உருவாக முடியும்.

    12-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலும் அறிமுகமாகி தற்போது வரை பிரபலமாக உள்ள கசல் பாடல்களுக்கும், கசல் பாடகர்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

    வட இந்தியாவில் புகழ் பெற்ற கசல் பாடகராக திகழ்ந்தவர், பங்கஜ் உதாஸ் (Pankaj Udhas).

    1951 மே 17 அன்று குஜராத் மாநில ஜெத்பூரில் பிறந்த பங்கஜ் உதாஸ், 1980ல் "ஆஹத்" எனும் ஆல்பம் வெளியிட்டு புகழ் பெற்றார்.

    தொடர்ச்சியாக பல ஆல்பங்கள் மூலமாகவும் கசல் கச்சேரிகள் மூலமாகவும் புகழ் பெற்று வந்த அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர்.


    1986ல் வெளியான "நாம்" எனும் இந்தி திரைப்படத்தில் "சிட்டி ஆயி ஹை" (கடிதம் வந்துள்ளது) எனும் பாடல் மூலம் திரைத்துறையிலும் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார்.

    தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் பின்னணி பாடகராகவும் ரசிகர்களை ஈர்த்தார்.

    சல்மான்கான்-சஞ்சய் தத் இணைந்து நடித்த "சாஜன்" (Saajan) மற்றும் அக்ஷய்குமார்-சுனில் ஷெட்டி இணைந்து நடித்த "மொஹ்ரா" (Mohraa) போன்ற வெற்றிப்படங்களில் பாடியுள்ளார்.

    2006ல் இந்திய அரசு பங்கஜ் உதாசிற்கு பத்மஸ்ரீ (Padma Shri) பட்டம் வழங்கி கவுரவித்தது.

    பங்கஜ் உதாஸ் இன்று காலை 11:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.

    பங்கஜ் உதாஸ் காலமான செய்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


    ×