கவுதம் வாசுதேவ் மேனனின் "ஜோஷ்வா" டிரெயிலர் வௌியீடு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
கவுதம் வாசுதேவ் மேனனின் "ஜோஷ்வா" டிரெயிலர் வௌியீடு
Published on

இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "ஜோஷ்வா- இமை போல் காக்க" பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் மார்ச் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கடந்த வாரம், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.

இந்நிலையில், ஜோஷ்வா- இமை போல் காக்க திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீஸ் ஆனது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com