என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • டிமான்டி காலனி 2 படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது.

    இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ள நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான நொடிகளே என்ற பாடல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜமா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படத்தின் டிரைலர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

    'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி ராஜா சாப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
    • படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    பிரபாஸ் சமீபத்தில் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படமான தி ராஜா சாப் படத்தை குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரபாஸ் ஒரு பூங்கொத்தை எடுத்து அதில் உள்ள மலர்களை எடுத்து அவருக்கு அவரே திருஷ்டி கழிக்கும் விதமாக காட்சிகள் அமைத்துள்ளது. மிகவும் ஸ்டைலாக, சமீபத்தில் வந்த படங்களில் ஒப்பிடும் பொழுது இப்படத்தில் கூடுதல் அழகான லுக்கில் இருக்கிறார். இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 இதுவரை 150 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி இந்தியன் 2 படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்புடன் வெளியாகியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. இப்படம் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, 'கதறல்ஸ்' என்ற பாடல் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள கலேண்டர் சாங் வெளியானது.

    இந்தியன் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
    • சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என ஆதங்கம்.

    செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த மருத்துவர், செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

    நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்டபோதும் எதிர்க்குரல் எழுப்பியவர்தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்.

    உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவா? உணவு ஆலோசகருக்கான விளம்பரமா? என டாக்டர் நயன்தாராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என மருத்துவர் சரமாரியாக புகார் தெரிவத்துள்ளார்.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து, செம்பருத்தி டீ தொடர்பான பதிவை நயன்தாரா நீக்கியுள்ளார்.

    மேலும், முட்டாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என மார்க் ட்வைன் கருத்தை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

    • வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார்.
    • வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

    கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே.

    தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவே.

    சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் மாரி இயக்கிய கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் முதல் பாடலான தென்கிழக்கு கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 28 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் அடுத்த பாடலான `ஒரு ஊர்ல ராஜா' என்ற பாடல் தற்பொழுது வெளியாகவுள்ளது. இப்பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் தவில், பம்பல், தாளம், உறுமி போன்ற இசைக் கருவிகளை பயன் படுத்தியுள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தனுஷுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பல ரசிகர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தனர். இதற்கெல்லாம் நன்றி சொல்லும் வகையில் தனுஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் என் பார்வையாளர்களுக்கும் , சக திரைத்துறை நண்பர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், பத்திரிக்கைத்துறைக்கும் மற்றும் என்னுடைய நம்பிக்கை தூண் ஆன ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் எனவும், இது தான் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு. என்றும் அன்புடன் தனுஷ் என பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

    தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்து கூட்டமானது இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவது என்றும் . நடிகர் , நடிகைகளின் சம்பளம் குறித்து முடிவெடுக்கும் வரை படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு.

    முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும். 

    நடிகர், நடிகைகளின் சம்பளத்தை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை உருவாக்க திட்டம் எடுக்க பட உள்ளதாக கூறியுள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் புதிய படத்திற்கு பூஜை போடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளனர். பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கியுள்ளதால் புதிய படத்திற்கு பூஜை போடக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளனர்.

    இதனால் தமிழ் சினிமா துறையில் சில மாற்றங்களும் , நடிகர்கள் மற்றும் டெக்னிஷியங்களின் ஊதியம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

    கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே.

    தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவே.

    சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் மாரி இயக்கிய கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் முதல் பாடலான தென்கிழக்கு கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 28 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் அடுத்த பாடலான `ஒரு ஊர்ல ராஜா' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இது குறித்து மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு ஊர்ல ராஜா ஒருத்தன் இருந்தானாம் அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம். என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த கங்குவா படம் வெளியாகிறது.
    • கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் இறுதி காட்சியில் நடிகர் கார்த்தி நடித்து இருப்பதாக படக்குழு கூறியுள்ளது. இதனை பாடலாசிரியர் விவேகா சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், அதில் அவர் கார்த்திக்கு எதிரான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார், ஆனால் இருவரும் இணைந்து ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் மிக ஆவலாக காத்து இருக்கின்றனர்.

    தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள்  மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தை கமிட் செய்ய வேண்டும் என்று தீர்மான நிறைவேற்றி இருக்கிறார்கள்.
    • கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.

    தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்து கூட்டமானது இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்க முடிவெடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலேசித்து அதன் பின்னர் படத்தை கமிட் செய்ய வேண்டும் என்று தீர்மான நிறைவேற்றி இருக்கிறார்கள்.

    இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் தனுஷ் நிறைய தயாரிப்பாளரிடம் பணத்தை வாங்கிவிட்டு படத்தை முடித்து கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

    தனுஷ் வேறு ஒரு படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்குமுன் அவரது 50 படமான ராயன் படத்தை தொடங்கி விட்டார். ராயன் படத்திற்கு முன்புபே அட்வான்ஸ் வாங்கிய படங்கள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.
    • சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து டந்த ஜூன் 14 ஆம் தேதி வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மகுடம் சூடியுள்ளது. இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். வெகு நாட்களாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகத் திரையில் பார்க்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது.

    விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.

    இந்நிலையில் மகாராஜாவை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறதாம் . மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள் பின்னர் முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு இணையாக அமீர் கான் மட்டுமே பாலிவுட்டில் நடிக்க முடியும் என்று ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×