செம்பருத்தி டீ நல்லது..- நயன்தாராவின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை

ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என ஆதங்கம்.
செம்பருத்தி டீ நல்லது..- நயன்தாராவின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை
Published on

செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மருத்துவர், செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.

நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்டபோதும் எதிர்க்குரல் எழுப்பியவர்தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவா? உணவு ஆலோசகருக்கான விளம்பரமா? என டாக்டர் நயன்தாராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என மருத்துவர் சரமாரியாக புகார் தெரிவத்துள்ளார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, செம்பருத்தி டீ தொடர்பான பதிவை நயன்தாரா நீக்கியுள்ளார்.

மேலும், முட்டாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என மார்க் ட்வைன் கருத்தை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com