`ஒரு ஊர்ல ராஜா ஒருத்தன் இருந்தானாம்' - வாழை படத்தின் 2 சிங்கிள்

சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
`ஒரு ஊர்ல ராஜா ஒருத்தன் இருந்தானாம்' - வாழை படத்தின் 2 சிங்கிள்
Published on

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசிப் படம் இதுவே.

தற்பொழுது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவே.

சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் மாரி இயக்கிய கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல் பாடலான தென்கிழக்கு கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 28 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் அடுத்த பாடலான `ஒரு ஊர்ல ராஜா' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இது குறித்து மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு ஊர்ல ராஜா ஒருத்தன் இருந்தானாம் அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம். என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com