என் மலர்
சினிமா செய்திகள்
- ஒலிம்பிக் போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர்.
- பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், சிரஞ்சீவி கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹாவை வீழ்த்தினார்.
இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
இப்போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர். போட்டி முடிந்ததும் பி.வி.சிந்து உடன் ராம் சரண், உபாசனா புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த படத்தை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னதாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், அவரது மனைவி உபாசனா மற்றும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. அந்த வரிசையில், இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதனிடையே எக்ஸ் தளத்தில், "இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெரிய திரைப்படம் விஎஃப்எக்ஸ் பணிகள் முழுமை பெறாததால், ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளது," என்ற தகவல் வெளியானது. இந்த பதிவிற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இரண்டு முறை பதில் அளித்தார்.

அதில், "இந்த தகவலில் உண்மையில்லை, நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம், 24x7 பணியாற்றி வருகிறோம் கிக்ஆஸ் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம், நெகடிவிட்டி மற்றும் பொய் செய்தியை பரப்ப வேண்டாம்," என குறிப்பிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் அளித்த இரண்டாவது பதிலில், "மன்னிக்கவும், நீங்கள் கோட்-ஐ டேக் செய்யவில்லை. நாங்கள் நேரத்திற்கு வருகிறோம், செப்டம்பர் 5 உலகம் முழுக்க," என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பதில் அளித்த எக்ஸ் தள பயனர் ஒருவர் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாத்தி "ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல்," என பதில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கோட் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
- தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் அவர் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
ராயன் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் நேற்று தனது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் தனுஷ் வீட்டிற்கு முன்பு நேற்று குவிந்தனர். தனது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் கையில் ருத்ராட்ச மாலையுடன் மகன்களோடு உருகி நின்று சாமி தரிசனம் செய்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்.
- தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் முதல் பாடலான மேனா மினிக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். இதையொட்டி படத்தின் முக்கிய பிரபலங்களான விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பா. ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் மற்றும் ஞானவேல்ராஜா கேரளாவில் ப்ரோமோஷன் பணிக்காக சென்றனர்.
கேரளாவின் ரசிகர்கள் படக்குழுவினருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். சீயான் விக்ரமிற்கு கேரளா ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். விக்ரம் இந்த அன்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மிகவும் ஸ்டைலிஷாக ஸ்வேகாகவும் பிங்க் கலர் கோட் சூட்டில் மிரட்டியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிமாண்டி காலனி படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
- டிமாண்டி காலனி படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்பொழுது படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது. இதனால் இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காணலாம். படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 24 நிமிடங்களாக இடம்பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் 9 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வந்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதே அளவு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
- ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ராயன் படத்தின் நடித்த துஷரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்னா முரளி, மற்றும் பலர் அவர்களது வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
ரசிகர்கள் அவர்களது அன்பை மற்றும் வாழ்த்தை தெரிவிக்க இன்று தனுஷின் வீட்டை சூழ்ந்தனர், அங்கு தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தாற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மாதம் 'லக்கி பாஸ்கர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
- லக்கி பாஸ்கர் படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கடந்த மாதம் 'லக்கி பாஸ்கர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் 'லக்கி பாஸ்கர்' என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் டிராக் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் 90 காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களத்தால் பாடலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப இசையமைத்துள்ளனர். இப்பாடலை பிரபல பின்னணி பாடகியான உஷா உதுப் அவரது கம்பீரமான குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை ராமஜொகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார்.\
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் பால சரவணன். விஜய் டி.வியில் சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் மக்களின் கவனத்தை பெற்றார்.
அதைத்தொடர்ந்து டார்லிங் மற்றும் திருடன் போலீஸ் திரைப்படத்தில் பால சரவணனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியான அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட் லிஸ்ட் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியானது.
இப்படம் பிரபல இயக்குனர் இமயம் பாலு மகேந்திராவின் குறும்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்தலிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை தயாரித்து படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
- படத்திற்கு ஸ்வீட்ஹார்ட் என்று பெயரிட்டுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. தற்பொழுது விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.
இத்ற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார்.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் அவர்களது 4 - வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தின் அனவுன்ஸ்மண்ட் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி , ரெஞ்சி பானிக்கர் , அருணாச்சலம் பா, துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கவுள்ளார்.
படத்தின் அனவுன்ஸ்மண்ட் வீடியோ மிகவும் நகைச்சுவை பாணியில் இருக்கின்றது. இப்படத்தை தயாரித்து படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்திற்கு ஸ்வீட் ஹார்ட் என்று பெயரிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எமக்கு தொழில் ரோமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
- தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் மீது உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன்.
அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
படக்குழுவினர், இயக்குனர், தியாகராஜா குமாரராஜா மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். ஆனால் படத்தின் நாயகன் அசோக் செல்வன் கலந்துக் கொள்ளவில்லை.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் அவரது ஆதங்கத்தையும், தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷட்டப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசினார். அஷோக் செல்வன் மற்றும் நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துக் கொள்ளாததால் படக்குழுவினர் அவர்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவதற்கு முன்பே பணம் வேண்டும் என்று கேட்டார், அதையும் நாங்கள் கொடுத்தோம், இன்று அவர் வரவில்லை. போன் செய்தாலும் அவர் எடுக்காமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்
இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- . போட் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் `போட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க ஒரு படகு ஓட்டும் நபருடன் கடலுக்கு தப்பிக்கின்றனர்.
இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். அவர் நேர தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மற்றொரு படப்பிடிப்பில் இருந்து வருவதால் தாமதம் ஆனது என்றார்.
படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, இயக்குனர் சிம்புதேவனுக்கு நன்றி, படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் செய்தியாளர் விடாமல் கேட்ட கேள்வியால் சற்று கடுப்பான யோகிபாபு அனைவருக்கும் நன்றி மேடையில் இருந்து கீழே இறங்கினார் அப்பொழுதும் விடாமல் ஒரு செய்தியாளர் கேள்விகளை கேட்டார். அப்பொழுது அதற்கு அவரைப் பார்த்து யோகி பாபு , மைக் ஆஃப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன் என சொடக்குப் போட்டு சொல்லிவிட்டு கிழம்பி சென்றார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ராயன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், " ஹேப்பி பர்த்டே டு மை ராயன், தனுஷ் அண்ணா, உங்களை போல் இருப்பது வாழ்வில் மிகவும் கடினம், தொடர்ந்து நடித்தும் எங்களை நடிக்க தூண்டுதலாக இருப்பதற்க்கு மிக்க நன்றி , நீங்கள் மிகவும் திறம்மைவாய்ந்தவர், உங்களுக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும், ராயன் குடும்பத்தில் என்னை சேர்த்ததற்கு நன்றி இப்படிக்கு அவரது கதாப்பாத்திர பெயரான முத்துவேன் ராயன் " என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






