என் மலர்
சினிமா செய்திகள்
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
- படத்தின் புது போஸ்டர் வெளியிடப்படுகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
விடாமுயற்சி படத்தின் 4-வது லுக் போஸ்டரில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இடம்பெற்று இருக்கிறார். வழக்கம்போல் இந்த போஸ்டரிலும் புதிய புகைப்படம் தவிர ரிலீஸ் மற்றும் இதர பணிகள் என படத்தின் நிலை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், விடாமுயற்சி படத்தின் புது அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷின் கதாப்பாத்திரம் ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது.
- நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியா வரவேற்பை பெற்றது.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியா வரவேற்பை பெற்றது. நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாப்பாத்திரங்கள் பணத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் தனுஷின் கதாப்பாத்திரமோ ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 'குபேரா' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாக்டர் டூம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறுகிறார்.
- மார்வல் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
ஹாலிவுட்டில் பிரபல நிறுவனங்களில் ஒன்று மார்வல் ஸ்டூடியோஸ். இதன் "அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே" நிகழ்ச்சி சான் டியாகோ காமிக்-ஆன் 2024-இல் நடைபெற்றது. இந்த காமிக்-ஆன் நிகழ்வில் மார்வல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் "டாக்டர் டூம்" படத்தின் புதிய அப்டேட் வெளியானது.
இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கிறார். படம் தொடர்பான அறிவிப்பை ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மார்வல் ஸ்டூடியோஸ் தலைவர் கெவின் ஃபெய்க் இணைந்து வெளியிட்டனர்.
உலகளவில் புகழ்பெற்ற "அயன்மேன்" கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் படத்தில் ஃபென்டாஸ்டிக் ஃபோரில் புதிய வில்லின் கதாபாத்திரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அயன்மேன் மற்றும் மார்வெல் சினிமேடிக் யூனிவர்ஸில் கதாநாயகனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறுகிறார்.
மார்வல் யூனிவர்சில் அதிக ரசிகர்களை கொண்ட ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் எம்சியூ-வில் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், புதிய மார்வல் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
- இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்தன.
இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியின் ஓய்வு நேரத்தில் திருமாவளவன் வருகை குறித்து அறிந்து கொண்ட இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் மற்றும் திருமாவளவன் சந்திப்பு குறித்த தகவலை விடுதை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் இருவர் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, அவர் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் BTS காட்சிகளை நள்ளிரவு 12 மணிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ராயன் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இயக்குநர் தனுஷ் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது.
- ரசிகர்களிடம் அருண் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அருண் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
அவர்களுடன் அருண் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அவரை கூட்டத்தில் இருந்து மீட்டு சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். பின்னர் வெளியே வரும்போது புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே அருண் விஜய் சிக்கிக் கொண்டார்.
இதனிடையே கூட்டத்தில் சிலர் அருண் விஜய் காலில் மிதித்தால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அருண் விஜய்யை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.
- காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்களால் சில மாதங்களுக்கு முன் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சட்னி சாம்பார் தொடர் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
- யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
அந்நிகழ்வில்
நடிகை வாணி போஜன் பேசியதாவது…
ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.
இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது...
திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்தஎன்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்னேஷ் சிவன் `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர்
'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.
இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து அமர்ந்து இருக்கிறார்.
இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
- இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
2019 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம் , கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் URI: தி சர்ஜிகல் ஸ்டிரைக்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்பொழுது இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பட்டியலை ரன்வீர் சிங் அவரது இன்ஸ்டாகிராமின் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜூன் ராம்பல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளது. இப்படம் இந்தியன் இண்டலிஜன்ஸ் ஆஜென்சியின் பணிபுரியும் ஆபிசர்களை மையப்படுத்தின கதைக்களமாகும்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
- உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது
மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது அந்த வரிசையில் டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் அடுத்ததாக இடம் பெற்றுள்ளது. இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்கிலத்தில் மட்டும் இல்லாமல் இப்படத்திற்கு ஐதராபாதில் கட் அவுட், பேனர் என நம்மூர் ஹீரோக்களுக்கு வழிபாடு நடத்தும் வகையில் மக்கள் கொண்டாடினர். இத்திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளது.
ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும், ஹுக் ஜாக்மேன் வோல்வரினாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் பதிந்துள்ளனர். இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 20 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது இந்திய மதிப்பில் 830 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் .
இதன் மூலம் மார்வெல் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ் வரிசையில் தற்பொழுது டென்பூல் & வோல்வரின் இணைந்துள்ளது.
தமிழ் டப்பிங் பணிகள் இப்படத்திற்கு சிறப்பாக செய்துள்ளனர், படத்தில் வரும் அனைத்து நகைச்சுவ காட்சிகளும் நொர்க் அவுட் ஆகியுள்ளது. நீங்கள் ஒரு மார்வல் மற்றும் டெட்பூல் & வோல்வரின் ரசிகனாக இருந்தால் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இப்படம் இருக்கும், திரையரங்களில் பார்க்க தவறவிடாதீர்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
- ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.
தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஒடியது. தனுஷின் முந்தைய படங்களான கேப்டன் மில்லர், கர்ணன், வாத்தி ஆகிய திரைப்படங்களை ஒப்பீடும் பொழுது ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் நாளில் 'ராயன்' ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது உண்மையானால், தனுஷ் இதற்கு முன்னதாக நடித்திருந்த கர்ணன், திருச்சிற்றம்பலம் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் முதல்நாள் வசூலை விட அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டில் மட்டும் 11 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் திரைப்படம் முதல் நாளில் ரூ.10 கோடியும், திருச்சிற்றம்பலம் ரூ. 8 கோடியும், கேப்டன் மில்லர் ரூ. 9 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






