எஸ்.ஜே சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட LIK படக்குழு

விக்னேஷ் சிவன் `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர்
எஸ்.ஜே சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட LIK படக்குழு
Published on

'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.

இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து அமர்ந்து இருக்கிறார்.

இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com