அஷோக் செல்வனின் எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்

T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
அஷோக் செல்வனின் எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்களால் சில மாதங்களுக்கு முன் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com