தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: BTS வீடியோவை வெளியிட்ட ராயன் படக்குழு

ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: BTS வீடியோவை வெளியிட்ட ராயன் படக்குழு
Published on

தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.

ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, அவர் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் BTS காட்சிகளை நள்ளிரவு 12 மணிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ராயன் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இயக்குநர் தனுஷ் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com