பால சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திகில் நிறைந்த `பேச்சி' திரைப்படம்

பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பால சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திகில் நிறைந்த `பேச்சி' திரைப்படம்
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் பால சரவணன். விஜய் டி.வியில் சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் மக்களின் கவனத்தை பெற்றார்.

அதைத்தொடர்ந்து டார்லிங் மற்றும் திருடன் போலீஸ் திரைப்படத்தில் பால சரவணனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியான அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட் லிஸ்ட் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியானது.

இப்படம் பிரபல இயக்குனர் இமயம் பாலு மகேந்திராவின் குறும்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்தலிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com