ஆடியோ Launch-க்கு வராத அசோக் செல்வன்... வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..!

எமக்கு தொழில் ரோமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் மீது உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆடியோ Launch-க்கு வராத அசோக் செல்வன்... வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்..!
Published on

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன்.

அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

படக்குழுவினர், இயக்குனர், தியாகராஜா குமாரராஜா மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். ஆனால் படத்தின் நாயகன் அசோக் செல்வன் கலந்துக் கொள்ளவில்லை.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் அவரது ஆதங்கத்தையும், தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷட்டப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசினார். அஷோக் செல்வன் மற்றும் நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துக் கொள்ளாததால் படக்குழுவினர் அவர்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவதற்கு முன்பே பணம் வேண்டும் என்று கேட்டார், அதையும் நாங்கள் கொடுத்தோம், இன்று அவர் வரவில்லை. போன் செய்தாலும் அவர் எடுக்காமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்

இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com