என் மலர்
சினிமா செய்திகள்
- எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது.
- கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம்.
சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அரசியலுக்கான என் பெயரை இழுக்க வேண்டாம் என சமந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமந்தா கூறியிருப்பதாவது:-
எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது பொறுப்பாக இருக்க வேண்டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்.
என சமந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாகர்ஜுனா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள்.
தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் கூறவில்லை.
- சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவே காரணம் என்றார் தெலுங்கானா மந்திரி.
ஐதராபாத்:
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.
தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சுரேகாவின் இந்தப் பேட்டிக்கு நடிகர் நாகர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாகர்ஜுனா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- லப்பர் பந்து திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளியான 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையை கொண்டிருந்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. லப்பர் பந்தை பார்த்த ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களில் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார்.
- தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார். தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு நேற்று அறிவித்தது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு இன்று காலை அறிவித்தது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தளபதி 69 படத்தில் மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடலை வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
- வேட்டையன் படத்தின் டிரைலர் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடத்தைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 படத்தில் பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
- பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.
தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.
அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு நேற்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர். டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர். டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- IIFA விருது விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
- தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன் என மீனா பேசியுள்ளார்.
2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த விருது விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அழைப்பின் பேரில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர். அப்போது செய்தியாளர்களில் ஒருவர் அவரிடம் "இந்தியில் பேசுங்கள்" என்றார். அதைக்கேட்டு கடுப்பான மீனா, "இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேச வேண்டுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?
தென்னிந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என மீனா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
- கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
அதில் நடிகர் பிரபு புல்லட்டில் செல்லுவது போலும் அதற்கு பின்னால் நடிகர் வெற்றி சைக்கிளில் வருவதுப் போல் காட்சி அமைந்துள்ளது. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி நடித்துள்ளனர்.
ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும் வீக்கமும் கண்டறியப்பட்டது. உடனடியாக அதற்கேற்ற சிகிச்சையை டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் அளித்தனர்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அறிவித்துள்ளனர்.
இதுக்குறித்து நடிகர் மற்றும் தவெக தலைவரான விஜய் விரைவில் குணமடையுமாறு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார் அதில் "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






