'வேட்டையன்' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.வேட்டையன் படத்தின் டிரைலர் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'வேட்டையன்' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Published on

ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடத்தைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com