என் மலர்
சினிமா செய்திகள்
கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள ‘எவனென்று நினைத்தாய்’ படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மாஸ்டர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் 232-வது படமான ‘எவனென்று நினைத்தாய்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக கூறியிருக்கிறார்.
திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை தெரிவிக்க தயார் என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் தெலுங்கு பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் போதைப் பொருள் உள்ளது என்றும் அது மட்டுமின்றி பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை தெரிவித்த தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி லைகா நிறுவனம் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கத்தி, 2.O, தர்பார், மாஃபியா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த லைகா நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘ஹேப்பி பர்த் டே டியர் பி எம்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் அவரது 70வது பிறந்தநாளான இன்று தமிழில் “கர்மயோகி” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை வழங்குவதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் பெருமைப்படுகிறது”.

மேலும், இத்திரைப்படத்தை எஸ் சஞ்சய் திரிபாதி அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், சன்டயல் மற்றும் பன்சாலி புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் மஹாவீர் ஜெயின் தயாரித்துள்ளனர்” என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
“கர்மயோகி” பிரதமர் மோடி பற்றிய சிறப்பு திரைப்படம். மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறது.
கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் அடுத்ததாக அடல்ட் காமெடி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் மகத். இவர் அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது உத்தமன் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மகத் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தயாரிக்கும் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும், அடல்ட் - காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த செய்திக்கு திரிஷா, நயன்தாரா நண்பர் விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனில் ஷாலு ஷம்மு, ரியோ ராஜ், சஞ்சனா சிங், ஷிவானி நாராயணன் என சில போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பேஷன் நடனக் கலைஞர் மற்றும் பிரபல ஒப்பனையாளர் கருன் ராமன் பிக் பாஸ் 4-ல் தற்போது ஒரு போட்டியாளராக இணைந்து இருப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த அவர், நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இல்லை. மற்றும் வரவிருக்கும் எனது அடுத்த திட்டம் அதை விட பெரியது என்று கூறியுள்ளார்.

கருன் ராமன் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். திரிஷா, நயன்தாரா போன்ற பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படம் இறுதி கட்டத்திற்கு சென்று இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர். அனிருத் மியூசிக்கில் உருவாகும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டாக்டர் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி இருக்கிறது.
டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் படக்குழுவினர் துவங்கி இருக்கிறார்கள். அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்க்கான, அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும், போதுமான தனிமனித இடைவெளியையும் கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து, டப்பிங் பணிகளை செய்து வருகிறது படக்குழு.

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
எனது பிரதிநிதியாக முன்னுறுத்திக் கொள்பவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித், வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் சட்டப்பூர்வ ஆலோசகர் அஜித் குமார் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிகாரர் சார்பாகவோ, அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிகாரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.
இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
மேலும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரேனும் அணுகினால் அந்த தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால் அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார்.
அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் பிரபாசுக்கு தம்பியாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அதர்வா ஏற்கனவே தெலுங்கில் கத்தலகொண்டா கணேஷ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது ரசிகனுக்கு ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் ரஜினி ரசிகர் முரளி. உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த் மன்றத்தை முதலில் தொடங்கியதும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. இதையடுத்து இன்று ரஜினிகாந்த் ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது கன்னா. இறைவனை பிரார்த்திக் கிறேன். நீங்கள் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுங்க. வீட்டுக்கு வந்த பிறகு குடும்பத்தோடு எனது வீட்டுக்கு வாங்க. தைரியமாக இருங்க. வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினிகாந்த் ஆடியோவில் பேசியுள்ளார்.
#ரசிகனின்_அன்புத்தலைவன்_ரஜினி
— தர்மதுரை ரஞ்சித் (@ranjibhai) September 17, 2020
என்னைக்கும் ரசிகன் மேல் உயிரே வைத்திருக்கும் தலைவன்..
முதல் முறை என் ரசிகர்கள் எனக்கு தெய்வம் என்று சொன்ன ஒரே தலைவர் நம்ம @rajinikanth#Rajinikanth#Annaatthepic.twitter.com/hiMvZ6ZrRg
முன்னதாக முரளி உருக்கமான டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தலைவா எனது இறுதியான ஆசை 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைப் போட்டு அடிதட்டு கிராம மக்களின் தனி நபர் வருமானம் ரூ.25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிகொடு.
உன்னை அரியணையில் ஏற்ற பாடுபட முடியவில்லை என்ற ஒரே வருத்தம் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முரளி குணம் அடைந்து வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், சிறுநீரக பிரச் சினை, கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் அடுத்ததாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் 50 சதவீதம் முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விரைவில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.
ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கவும் 2 மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாக்கி ஷெராப் ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக வந்தார். ஆரண்ய காண்டம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அண்ணாத்த படத்தில் பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி ஆகியோரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர்.
ரஜினி மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் நயன்தாரா வக்கீலாக வருகிறார் என்றும் தகவல் கசிந்துள்ளது. கிராமத்து பின்னணியை கொண்ட கதையம்சத்தில் தயாராகிறது. கொரோனாவால் அண்ணாத்த படம் கைவிடப்பட்டு விட்டதாக வெளியான தகவலை படகுழுவினர் ஏற்கனவே மறுத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க உள்ளாராம்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை சமந்தா நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், ஓ பேபி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில் வாய்பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருகிறார். திகில் படமாக இது தயாராகிறது.

இதுகுறித்து சமந்தா கூறும்போது, “வாழ்க்கையில் புது புது சவால்களை ஏற்றால்தான் நமக்குள் உள்ள திறமை வெளியே வரும். இது எல்லா துறையினருக்கும் பொருந்தும். நடிகையாக எனக்கு இப்போது எந்தவித பயமும் இல்லை. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரம் கொடுத்தாலும் செய்ய முடியும் என நம்புகிறேன். அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு பாராட்டுகள் கிடைத்தது” என்றார்.






