என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
    கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தினர். 

    புனித் ராஜ்குமார் நல்லடக்கத்திற்கு பிறகு, நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினி
    ரஜினியுடன் புனித் ராஜ்குமார்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்... Rest in peace my child' என்று உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
    தமிழில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
    காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற ஓ..மரியா என்ற பாடல் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடன இயக்குனர் கூல் ஜெயந்த். அதேபோல் வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில், , குஷி படத்தில் மொட்டு ஒன்று.., ப்ரியமானவளே-வில் வெல்கம் பாய்ஸ், ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்து இருக்கிறார்.

    கூல் ஜெயந்த்

    மேலும் பல வெற்றிப் படங்களுக்கும், விருது படங்களுக்கும் நடனம் அமைத்திருக்கிறார் கூல் ஜெயந்த். இந்நிலையில், கேன்சர் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. கூல் ஜெயந்த் மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
    பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’ உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

    லட்சுமி மேனன்

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.


    சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

    இதனால், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில், நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவருடன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, புனித் ராஜ்குமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர். நெருக்கமாக இருந்தவர். எனது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து தலைவர் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
    டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் டான் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    சிவகார்த்திகேயனின் டான்

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    டெல்லியில் 2வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். இதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது; எஸ்.பி.பி சார்பில் எஸ்.பி.சரண் விருதை பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மபூஷன் விருதை பிரபல பாடகி சித்ரா பெற்றுக் கொண்டார்.

    பாடகி சித்ரா

    பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 
    மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கான பத்ம விபூஷன் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.
    பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    எஸ்.பி.சரண்

    பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்திற்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகை கதாநாயகியாக நடிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் ‘வேதாளம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

    தமன்னா
    தமன்னா

    இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், கதாநாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். தமன்னா ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொடுத்துள்ளார்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். 

    தயாரிப்பாளர் பதிவு
    தயாரிப்பாளர் பதிவு

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நவம்பர் 25ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
    முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் வைரலாவது போல, அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதுபோல் தீபாவளி தினத்தில் அண்ணாத்த படத்தை பார்த்து வெளியான ஷாலினியின் புகைப்படங்கள் வைரலானது.

    ஷாம்லி - ஷாலினி - அஜித் மகள்
    ஷாம்லி - ஷாலினி - அஜித் மகள்

    தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அனோஷ்கா வளர்ந்து தனது தாய் மற்றும் சித்தி ஷாம்லி அளவுக்கு உயரமாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஷாம்லி பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
    இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ரசிகர்கள் உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார்.
    இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பல்வேறு செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்குக் காலர் டியூன்களாகவும், ரிங் டோன்களாகவும் கொடுத்து அதற்குத் தனியாகப் பணம் வசூலித்து வருகின்றன. இதே போல சிலர் இளையராஜாவின் பழைய பாடல்களை நவீன முறையில் தர மேம்படுத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

    இளையராஜா

    இதற்கு முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி வாங்கினார்களா என்பது தெரியாது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இளையராஜா, ரசிகர்கள் தனது பாடல்களை உயர்தர தொழில் நுட்பத்தோடு கேட்க ஒரு புதிய செயலியைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் சில பாடல்களை அவரே நேரில் பாடி பதிவு செய்திருப்பதையும் பார்க்க முடியும். இந்த செய்தி இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா உள்பட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் முன்னோட்டம்.
    'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.

    கருங்காப்பியம் படக்குழு

    பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 
    ×