என் மலர்
சினிமா செய்திகள்
கணவர் சரமாரியாகத் தாக்கியதில் பிரபல நடிகை படுகாயம் அடைந்த சம்பவம், பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் கடந்தாண்டு சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை புறநகர் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது சாம் பாம்பே சரமாரியாகத் தாக்கியதில், நடிகை பூனம் பாண்டே பலத்த காயம் அடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கணவருடன் பூனம் பாண்டே
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகை பூனம் பாண்டே தன் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாம் பாம்பேவைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் அருண் விஜய்யும், சந்தானமும் பட வெளியீட்டில் போட்டி போட உள்ளனர்.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பார்டர், சபாபதி படங்களின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்துக்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் களமிறங்க உள்ளது. ‘சபாபதி’ படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி அருண்விஜய்யின் பார்டர் படத்துக்கு போட்டியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் ‘விருமன்’ படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கத்தில் தற்போது ‘விருமன்’ படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விருமன் படத்தின் போஸ்டர்
கிராமத்து கதையம்சத்தில் இப்படம் தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, படத்தை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கும் அவர் திரைக்கதை அமைக்க உள்ளார்.

கமல்ஹாசன், பா.இரஞ்சித்
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து முடித்த பின் அவர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. தற்போது இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைதி படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.

இந்நிலையில், கைதி படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஜப்பானில் ‘கைதி டில்லி’ என்ற பெயரில் இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் ஒன்று ஜப்பானில் ரிலீசாவது இதுவே முதன்முறை. ஏற்கனவே ரஜினி நடித்த படங்கள் சில ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், கார்த்தியின் கைதி படத்துக்கும் அங்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ரஜினி, சவுந்தர்யா
இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவா, இப்படத்தை முடித்த பின்னர், மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ராஷி கண்ணா
தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷி கண்ணா, மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தான் நடித்த படத்தின் விழாவில் தனது காதலிக்கு புரபோஸ் செய்து அசத்தி இருக்கிறார்.
அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் கார்த்திக்கேயா. இவர் ’ராஜா விக்ரமாதித்தன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்த போது தனது காதலிக்கு அவர் முழங்காலிட்டு மலர் கொடுத்து புரபோஸ் செய்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடிகர் கார்த்திக்கேயாவுக்கும் லோகிதா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் தனது காதலை படக்குழுவினர் முன்னிலையில் புரபோஸ் செய்த கார்த்திகேயா தங்களது திருமணம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த திருமணத்தில் இரு வீட்டார் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்த திரைப்படம் ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
கொரோனா பரவல் பிரச்னையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வருகிறது கேரளா. நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகளவில் கோவிட்-19 வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக அங்குள்ள திரையரங்குகள் எதுவும் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை கொண்டு வரும் நோக்கில், விஜய் நடித்த கில்லி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் கூட்டமாக கூட்டமாக வந்து ரசிகர்கள் குவிந்து கில்லி படம் பார்த்துள்ளனர்.
“வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்கடித்த நடிகை வினோதினி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.
இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் காலமான பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் காலமானார். இவர் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


இந்நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த பதிவு குழப்பத்தை ஏற்படுத்த, இப்போது புனித்தின் குடும்ப மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக
தென்னிந்திய நடிகையாக வலம் வரும் பிரியாமணி தன்னைப் பற்றி வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பருத்திவீரன் படம் மூலம் பல விருதுகளை அள்ளிக்குவித்த நடிகை பிரியாமணி, தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். தெலுங்கில் இரண்டு படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார்.


கணவருடன் பிரியாமணி
இதற்கிடையில் பிரியாமணி தனது கணவர் முஸ்தப்பா ராஜூவை பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தீபாவளி தினத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியாமணி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.






