என் மலர்
நீங்கள் தேடியது "tag 98493"
‘விருமன்’ படத்தின் கதாநாயகியான அதிதி சங்கரிடம் க்ரஸ் யார் என்ற கேள்விக்கு பதிலளித்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ‘விருமன்’ படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், அதிதி சங்கரின் அறிமுக படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

அதிதி சங்கர் - யாஷ்
இந்நிலையில், அதிதி சங்கரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களின் செலிபிரேட்டி க்ரஸ் யார் என்ற கேள்விக்கு "கேஜிஎப்” கதாநாயகன் ராக்கி பாய் (யாஷ்) என்று கூறி இருக்கிறார். இதை கேட்ட யாஷ் ரசிகர்கள் அந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் ‘விருமன்’ படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கத்தில் தற்போது ‘விருமன்’ படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விருமன் படத்தின் போஸ்டர்
கிராமத்து கதையம்சத்தில் இப்படம் தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, படத்தை 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.






