என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

    ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குஷி சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார். 

    ஜான்வி கபூர்

    ஆனால், ஜான்வி 'லுங்கி டான்ஸ்' என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங், பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
    ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

    விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யூ சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். 

    அஜித் - அபிமன்யூ
    அஜித் - அபிமன்யூ

    அபிமன்யூ ஏற்கனவே விஜய்யுடன் தலைவா, சூர்யாவுடன் ரத்த சரித்திரம்-2, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
    சர்ச்சை நடிகை என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது கங்கனா ரணாவத். இந்திய அரசு கங்கனாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது. இந்த நிலையில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார். 

    கங்கனா

    வருகிற ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று கங்கனா ரணாவத்திடம் கேட்டபோது, ‘‘விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். வர இருக்கும் ஆண்டுகளில் குழந்தைகள் பெற்று ஒரு தாயாக என்னை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்'' என்றார். உங்கள் வாழ்க்கையில் மனம் கவர்ந்த பிரத்தியேகமான ஆண் இருக்கிறாரா? என்று கேட்டபோது, ‘‘ஆம் இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் அனைவருக்கும் தெரியவரும்'' என்றார். 
    தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லட்சுமண். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். 

    சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சந்திரா லட்சுமண் தெரிவித்தார். 

    சந்திரா

    இந்த நிலையில் சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு வரும் நிலையில், ‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    ‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? என்பதே ‘ஜெய்பீம்’ படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் படத்தில் பேச முயற்சித்து இருக்கிறோம். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கும், படக்குழுவினருக்கும் இல்லை.

    ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’, என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம்.

    எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன, பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு.

    சூர்யா

    படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம். ஒருவரை (ஜெ.குருவை) குறிப்பிடுவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக சிலர் தெரிவிக்கிறார்கள். எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடுவதாக கருதப்பட்டால் அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல், பெயர் அரசியலால் மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

    சகமனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. 

    பாண்டிராஜ்
    இயக்குனர் பாண்டிராஜ் பதிவு

    இந்நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத் தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது. சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
    நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    பிரபு தேவா
    பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ் 

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 19 ஆம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
    ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

    மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சோனியா அகர்வால்
    சோனியா அகர்வால் - விமலா ராமன்

    கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். 

    இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
    சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் விஜய் -சூர்யா இருவரும் திடீரென சந்திந்துக் கொண்டனர்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.

    சூர்யா - விஜய்

    இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் - சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
    நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். 

    தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.

    கீர்த்தி சுரேஷ்
    கீர்த்தி சுரேஷ் - டோவினோ தாமஸ்

    ‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அடுத்ததாக சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சூர்யா
    சூர்யா - சிவா

    ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான், 24 உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    பொன் மாணிக்கவேல்

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    ×