என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

    பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    பூனம் பாஜ்வா
    பூனம் பாஜ்வா

    அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியாகின. 

    இந்த நிலையில் கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதி படம் 2019-ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள். 

    கார்த்தி, லோகேஷ் கனகராஜ்
    கார்த்தி, லோகேஷ் கனகராஜ்

    கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

    லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இருவரும் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ், மிர்ணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவுக்கு பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர், சி.வி.குமார். இவர் அடுத்ததாக தயாரித்திருக்கும் படம் ‘ஜாங்கோ’. சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாகவும், மிர்ணாளினி ரவி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, வேலு பிரபாகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

    ஜாங்கோ படத்தின் போஸ்டர்

    “இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் நவம்பர் 19ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகருடன் சண்டைப் போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
    'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள்.

    தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. 

    விஜய் தேவரகொண்டா
    பூரி ஜெகன்நாத் - விஜய் தேவரகொண்டா

    இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா - மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
    பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ராஜ்கிரண், தனது மகனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படம் என் ராசாவின் மனசிலே. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் கதாநாயகனாக நடித்த நடிகர் ராஜ்கிரண். இப்படத்தில் இவர் தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது பல காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

    தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    ராஜ்கிரண்

    இதற்கிடையில் நடிகர் ராஜ்கிரண், லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார். மேலும், 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
    பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தையை பிரிந்து தவிப்பதாக பதிவு செய்து இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வந்த சமந்தா, சமீபத்தில் வீடு திரும்பினார். சென்னையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்த அவர், மழையில் சிக்கிக்கொண்டார். 

    இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமந்தா, அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் ஒரு காட்சி. இன்னொன்று ஐதராபாத்தில் உள்ள தனது நாய்களான ஹாஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படம்.

    சமந்தா

    சோகமாக இருக்கும் ஹாஷ் மற்றும் சாஷாவின் படத்தில் "நான் ஒருநாள் இல்லை... என் சோகமான முதல் குழந்தை" என்று குறிப்பிட்டுள்ளார். ஹாஷ் தனது சகோதரி சாஷாவை விட மிகவும் சோகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் தங்கள் அம்மாவை சென்னையில் நீண்ட நாட்கள் தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
    வெங்கடேஷ், மீனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

    திரிஷ்யம் 2

    திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்- மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
    கவிஞர் வைரமுத்து பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கும் நாட்படு தேறல் என்ற தொடரில் விக்ரம் சுகுமாரன் இணைந்து இருக்கிறார்.
    தமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் புதிய பிரம்மாண்ட முயற்சியாக, ‘நாட்படு தேறல்’ என்ற தலைப்பில் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். தற்போது ‘நாட்படு தேறல்’ தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை மதயானைக்கூட்டம் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார்.

    விக்ரம் சுகுமாரன்
    விக்ரம் சுகுமாரன் - வைரமுத்து

    இதுகுறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், "நாட்படு தேறல் தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிபேரரசு வைரமுத்து ஐயாவுக்கு நன்றிகள். இது எனக்கு ஒரு பெருமிதமான தருணம்” என்றார்.
    ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இருக்கும் குருப் படத்தின் விமர்சனம்.
    கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.

    நாயகன் துல்கர் சல்மான் விமான படையில் பயிற்சி எடுத்து பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்லும் துல்கர் சல்மான், சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான், தனது பெயரை குருப் என்று மாற்றி வெளிநாடு செல்கிறார்.

    விமர்சனம்

    வெளிநாட்டில் தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் செய்து விட்டு இந்தியா திரும்பும் துல்கர் சல்மான், அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து முயற்சி செய்கிறார். இறுதியில் இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி கைப்பற்றினாரா? இல்லையா? தற்கொலை செய்து கொண்டதாக ஊரை நம்ப வைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், நெகடிவ் வேடத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். படத்திற்காக பல கெட்-டப் போட்டு அசத்தி இருக்கிறார். அந்த கெட்-டப்புகளும் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது. நடை, உடை என தன் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

    விமர்சனம்

    கதாநாயகியாக நடித்திருக்கும் ஷோபிடா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துல்கரின் உறவினராக வரும் ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவரது கதாபாத்திரம் திரைக்கதை ஓட்டத்திற்கு அதிகம் உதவி இருக்கிறது. போலீசாக வரும் இந்திரஜித் சுகுமாரன், நண்பராக வரும் பரத் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    உண்மை சம்பவத்தை சினிமாவிற்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். 1980களில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதால், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அனைத்திலும் பாராட்டை பெற்றிருக்கிறார். முதல் பாதி பல முடிச்சுகளுடன் மெதுவாக செல்ல, பிற்பாதியில் அந்த முடிச்சுகளை கழட்டும் விதம் அருமை.

    விமர்சனம்

    நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், கலை இயக்குனரின் வேலையும் படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது. சுசின் ஷாம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘குருப்’ பாராட்டலாம்.
    பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகைக்கு உதவி இருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அடுத்து இந்தி படங்களிலும் நடிக்க இருக்கிறார். அத்துடன் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சமூக சேவை பணிகளுக்கும் செலவிட்டு வருகிறார். ஏழை சிறுமிகளுக்கு கல்வி கற்கவும் உதவி வருகிறார். சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் கூட சமந்தாவிடம் இதுபோன்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டினார். 

    சமந்தாவிடம் உதவி பெற்றவர்களில் ஒரு நடிகையும் இருக்கிறார். அந்த நடிகையின் பெயர் தேஜஸ்வி மாதிவாடா. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தேஜஸ்வி மாதிவாடா கூறும்போது, “சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். 

    சமந்தா
    சமந்தா - தேஜஸ்வி மாதிவாடா

    இந்நிலையில் எனக்கு ‘டிபி' நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்'' என்று தெரிவித்துள்ளார்.
    மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார்.

    இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். 

    ரஞ்சித்

    இந்நிலையில், ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கு முன், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான இவர் இதற்கு முன்பே தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு நடிகை ரைசா வில்சன் “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, நடிகர் விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களுடன் வீடியோ உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் “லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா?“ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    ரைசா வில்சன்

    இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவ்விங் டுகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.
    ×