என் மலர்
சினிமா

கார்த்தி
கைதி 2-ம் பாகத்துக்கு தயாராகும் கார்த்தி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியாகின.
இந்த நிலையில் கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கைதி படம் 2019-ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

கார்த்தி, லோகேஷ் கனகராஜ்
கைதி 2-ம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இருவரும் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story