search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jango"

    மனோ கார்த்திக்கேயன் இயக்கத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகர், ஹரீஷ் பெராடி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் விமர்சனம்.
    டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் எரிக்கல் ஒன்று விழுவதை பார்க்கிறார். இதைப் பார்த்ததிலிருந்து டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார்.

    அதாவது, அவரது வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது. இந்நிலையில் மனைவி மிருணாளினி ரவியை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். இதை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சதீஷ்குமார் தனது மனைவி மிருணாளினி ரவியை காப்பாற்றினாரா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கவலை, வெறுப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி மிருணாளினி ரவி துணிச்சல் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார். 

    போலீசாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன். முதல் பாதி திரைக்கதை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், இரண்டாம் பாதியில் தெளிவுபடுத்துகிறார். இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால், கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘ஜாங்கோ’ புதிய முயற்சி. 
    சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ், மிர்ணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவுக்கு பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர், சி.வி.குமார். இவர் அடுத்ததாக தயாரித்திருக்கும் படம் ‘ஜாங்கோ’. சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாகவும், மிர்ணாளினி ரவி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, வேலு பிரபாகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

    ஜாங்கோ படத்தின் போஸ்டர்

    “இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் நவம்பர் 19ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    `சூப்பர் டீலக்ஸ்' படத்தை தொடர்ந்து டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #MirnaliniRavi #Jango
    டப்மாஷ் வீடியோ மூலம் பிரபலமான மிர்னாலினி ரவி தமிழில் `நகல்' என்ற படத்தில் முதலில் ஒப்பந்தமானார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விஜய் சேதுபதியின் `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

    இந்த நிலையில், சி.வி.குமார் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மிர்னாலினி நடிக்க இருக்கிறார். ஜாங்கோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, சிவாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.



    இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தை இயக்குகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. #MirnaliniRavi #Jango

    ×