என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள்.

    எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.

    விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், NJoy பிலிம்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனம் தயாரிக்கின்றன. முகமது மன்சூர் இசையமைக்கிறார். இப்படம் நவம்பர 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்நிலையில், 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் முதல் பாடல் இன்று மாலை 6.03-க்கு வெளியானது.

    இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை விஜய்,அனிருத் மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.

    சராசரி காதல் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.

    கும்பகோணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர் கவுஷிக். பள்ளி முடித்த நிலையில், துபாயில் வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் கதாநாயகி பிரதிபாவை சந்திக்கிறார். அவள் மீது காதல் வயப்படுகிறார். இதனால், துபாய் திட்டத்தை கைவிடும் கவுஷிக், பிரதிபா படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறார்.

    இவ்வாறு சென்றுக் கொண்டிருக்கையில், கவுஷிக் மற்றும் பிரதிபா தனது நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அப்போது, நண்பர்களுக்கு சாட்சி கையெழுத்துபோட தங்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றனர். நண்பர்களின் காதலுக்கு உதவி சென்ற இடத்தில் இவர்களுக்கு விபரீதம் ஏற்படுகிறது.

    இதனால், வரும் சிக்கல்களை கதாநாயகன் எப்படி சமாளித்து மீண்டு வருகிறார்? காதலே வேண்டாம் என்று இருக்கும் கதாநாயகியை கரம் பிடிக்கிறாரா ? என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    ஒரு கிராமத்து இளைஞராக கவுஷிக் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் இயல்பாக நடித்திருக்கிறார். பிரதிபா கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

    இயக்கம்

    கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யமாகவும், கிளைமேக்ஸில் செண்டிமென்டாகவும் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒரு சில குறைகள் இருந்தாலும் படத்தின் வேகம் சீராக செல்கிறது.

    இசை

    பாடல்கள் சுமார் என்றாலும், படத்திற்கு சிறந்த பின்னணி இசையால் பலம் சேர்த்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கிராமப்புற காட்சிகளை பசுமையா பதிவு செய்துள்ளார் பிரகத் முனிசாமி.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கவினுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

    இந்நிலையில், மாஸ்க் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 2.07 மணிக்கு வெளியாகும் என நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • கடத்தல் கும்பலிடம் இருந்து ஜான்விகா தப்பித்தாரா?
    • ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறியதா?

    பொறியியல் கல்லூரியில் படித்து வரும் நாயகி ஜான்விகா, படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமாக இருக்கிறார். இவரை கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஆனால் ஜான்விகா எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறார்.

    விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறார்.  முறையான பயிற்சிக்குப் பின் குறிபார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொண்டு ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.

    தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கார் மீது லாரி மோதிவிட்டு தப்பிச்செல்லும் விபத்தை ஜான்விகா பார்க்கிறார். காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறார். இதனால் கோபமடையும் குற்றவாளியின் கும்பல் ஜான்விகாவை கடத்துகிறார்கள்.

    இறுதியில் கடத்தல் கும்பலிடம் இருந்து ஜான்விகா தப்பித்தாரா? ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா கல்லூரி மாணவியாகவும் பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்து இருக்கிறார். தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாக மனதில் பதிந்து இருக்கிறார். படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள் சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

    ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன்,

    அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக கவர்ந்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    ஒரு பெண் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கலா அல்லூரி. பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு என்பது அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

    தனது  மகளை ராணுவத்தில் சேர்க்க விரும்பும் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஒரு மகளின் கதை தான் இந்த படம். அந்தப் பரிசை கொடுக்க கதாநாயகி படும் சவால்களும் சோதனைகளும் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். படத்தில் லாஜிக் மீறல்கள் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். காமெடி நடிகர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.

    இசை

    ராஜீஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஹமராவின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவுவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
    • சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான சீக்ரெட் அல்கெமிஸ்ட்டை வெளியிட்டார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ராஜ் நிடிமொருவுடன் அவர் மிகவும் நெருக்கமாக, இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.

    இதன்மூலம் இயக்குநர் ராஜ் நிடிமொரு உடனான காதலை, நடிகை சமந்தா கிட்டத்திட்ட உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ளது.

    சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் 'அரசன்' படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'அரசன்' படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 24-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர்.
    • சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்தார்.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

    முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.

    கடந்த வாரம் லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.

    இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர். இதில் தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் பங்கேற்றனர். உள்ளே வந்த அவர்கள், போட்டியாளர்களின் செயல்களுக்கு ஸ்டார் கொடுத்தார்கள். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை முடித்து பிக்பாஸ் வீட்டர்களை அழவைத்து சம்பவம் செய்தார்.

    இந்த வார எவிக்ஷன் பட்டியலில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் தவிர மற்ற பெரும்பாலான போட்டியார்கள் இடம் பெற்றிருந்த நிலையில், துஷார் இந்த வாரம் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்த டபுள் எவிக்ஷன் நடந்ததாகவும் அதில் 2 ஆவது நபராக பிரவீன் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூடியூபர் கேள்விகளை எழுப்பினர்.
    • கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

    மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது" என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

    • இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 17-ந்தேதி வெளியானது.
    • இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    இதனிடையே, 'டியூட்' படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 'டியூட்' படம் வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    திரையரங்குகளில் வசூலை குவித்த 'டியூட்' படத்திற்கு ஓ.டி.டி. தளத்திலும் கவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூரு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • கௌரி கிஷனின் துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது.
    • நடிகர் சங்கமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, எனக்கும் ஒரு யூடியூபருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பதட்டமாக மாறியது.

    ஒரு நபரின் உடல் அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேட்கப்படும் கேள்விகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சூழலிலும் சரியானது கிடையாது. அதே சமயம் சம்பந்தப்பட்ட யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம்.

    விமர்சனங்கள் எனது தொழிலின் ஒரு பகுதியாக இருப்பதை புரிந்திருக்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அந்த தருணத்தில் உறுதியுடன் நின்றது எனது கடமை என நினைக்கிறேன். இது எனக்காக மட்டுமல்ல. இதேபோன்ற அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமானது.

    படம் பற்றும் என்னுடைய நடிப்பை பற்றியும் கேட்கப்படும் கேள்விகளை தான் நான் விரும்புகிறேன். ஒரு கடினமான சூழ்நிலையில் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்க முடிந்ததற்கு எனக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    எனக்கு நடந்தது ஒன்றும் புதிதல்ல. அது பல இடங்களில் நடந்து வருகிறது. பாடி ஷேமிங் செய்வதை இது இயல்பாக்குகிறது. நமது அசௌகரியத்தை வெளிப்படுத்தவும், தவறு செய்யும்போது கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை உண்டு.

    மேலும் எனக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நான் எதிர்பார்க்காதது. உங்கள் ஆதரவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், அம்மா சங்கம் (மலையாள திரைப்படத் துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மற்றும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு பொதுமக்களுக்கு நன்றி. எனது சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எனக்கு ஆதரவு அளித்த தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    ×