என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலின் காத்திருப்பு காலம் மேலும் அதிகரித்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அதிக பிரபலமாகி விட்டது. இதுவரை புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    எனினும், இந்த காரின் உற்பத்தி எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய எக்ஸ்.யு.வி.700 வாங்க சுமார் 1.5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எக்ஸ்.யு.வி.700 எம்.எக்ஸ். பெட்ரோல் வேரியண்டை பெற 25 முதல் 27 வாரங்கள் வரையிலும், ஏ.எக்ஸ்.7 லக்சரி பேக் மாடலை பெற அதிகபட்சம் 75 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். 

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக எக்ஸ்.யு.வி.700 காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. காரை வேகமாக டெலிவரி பெற மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சில அம்சங்கள் இன்றி பெற்றுக் கொள்ள கேட்டுக்கொண்டு வருகிறது. இவ்வாறு செய்யும் போது காரை சற்று முன்னதாக பெற முடியும்.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.கியூ.எஸ். மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தி இருக்கிறது.


    2021 மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எஸ். மாடல் யூரோ என்கேப் (NCAP) பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடலான இ.கியூ.எஸ். பெரியவர்கள் பயணிக்கும் பாதுகாப்பில் 96 சதவீதம் புள்ளிகளையும், குழந்தைகள் பயணிக்கும் போது 91 சதவீத புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

    இந்த ஆண்டு யூரோ பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற எந்த கார் மாடலும் இத்தனை புள்ளிகளை பெறவில்லை. 2480 கிலோ எடை கொண்டிருக்கும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் சேஃப்டி அசிஸ்ட் பிரிவில் 80 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடம்பர எலெக்ட்ரிக் செடான் மாடல் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.எஸ்.

    புதிய எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் இ.கியூ.எஸ்.450 மற்றும் இ.கியூ.எஸ்.580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 333 ஹெச்.பி. திறன், 523 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும்.
    ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் மாடல் உள்நாட்டில் இதுவரை 4.6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2018 ஆண்டில் அமேஸ் இரண்டாம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹோண்டா அமேஸ் மாடலை வாங்கியவர்களில் 20 சதவீதம் பேர் சி.வி.டி. டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்துள்ளனர். 40 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்கியவர்கள் ஆகும். மற்ற மாடல்களை போன்றே அமேஸ் மாடலும் ஹோண்டாவின் ராஜஸ்தான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     ஹோண்டா அமேஸ்

    அமேஸ் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 90 பி.ஹெச்.பி. திறன், 110 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 99 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. 

    இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஆடி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கியூ7 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.


    2022 ஆடி கியூ7 மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 புகைவிதிகள் அமலுக்கு வந்த போது ஆடி கியூ7 சீரிஸ் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது. 

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2021 ஆடி கியூ5 மாடலை போன்றே புதிய கியூ7 மாடலும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இதில் 3 லிட்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள், பம்ப்பர் மற்றும் ஏர் டேம்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

     2022 ஆடி கியூ7

    இதன் டேஷ்போர்டு டுவின்-ஸ்கிரீன் எம்.எம்.ஐ. டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் 10.1 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, 8.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. முன்னதாக புதிய ஆடி கியூ7 மாடலின் உற்பத்தி பணிகள் ஔரங்காபாத் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
    டொயோட்டா நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டாவும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதையே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்துள்ளன.

    சமீப மாதங்களில் டொயோட்டா நிறுவனம் சில புது மாடல்கள் மற்றும் பேஸ்லிப்ட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி சிறிய மற்றும் எஸ்.யு.வி. மாடல்களை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     டொயோட்டா கார்

    வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி மற்றும் வினியோக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை அடுத்த ஆண்டும் தொடரும் என கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சமீபத்திய பண்டிகை கால விற்பனை மோசமாக நடைபெற்றது என ஆட்டோமொபைல் டீலர் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விற்றுத்தீர்ந்தது.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த வாரம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்குள் இந்த கார் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெற்ற முன்பதிவில் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தது என பி.எம்.டபிள்யூ. இந்தியா தெரிவித்தது.

    இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இரண்டாம் கட்ட முன்பதிவுகள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்குகிறது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ்.

    "இத்தகைய வரவேற்பை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் நாளிலேயே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யை வாங்க நினைக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆயத்தமாகி வருகிறோம்," என பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா தெரிவித்தார். 
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்திய உற்பத்தி விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட கோடியக் மாடலின் உற்பத்தியை மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் துவங்கியது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர் 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     ஸ்கோடா கோடியக்

    தோற்றத்தில் ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பிளாக்டு-அவுட் பட்டர்ஃபிளை கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், பிளாக் ஒ.ஆர்.வி.எம்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில்-லைட்கள் உள்ளன.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் குஷக் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சில மாதங்களிலேயே குஷக் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

    ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமான முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் கேண்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     ஸ்கோடா கார்

    இதன் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய செலரியோ மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை செலரியோ மாடலின் விற்பனை கடந்த மாதம் துவங்கியது. இதுவரை புதிய செலரியோ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவு நவம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.

    இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் இரு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த காரை வாங்க முன்பதிவு செய்பவர்கள் குறைந்தபட்சம் 12 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     மாருதி சுசுகி செலரியோ

    உதிரிபாகங்கள் குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் மாதாந்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021-இல் மட்டும் மாருதி சுசுகியின் உற்பத்தி 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. தற்போது மாருதி சுசுகி கார்களுக்கான காத்திருப்பு காலம் 9 முதல் 12 வாரங்கள் வரை இருக்கிறது. சி.என்.ஜி. மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 17 முதல் 18 வாரங்கள் வரை இருக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய 2022 கியூ7 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் 2022 ஆடி கியூ7 எஸ்.யு.வி. மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய ஆடி கார் உற்பத்தி ஔரங்காபாத் ஆலையில் துவங்கியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் கியூ சீரிஸ் மாடல்கள் ஆகும். புதிய கியூ7 முன்புறம் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட்கள், பெரிய ஏர் இன்டேக், குரோம் கார்னிஷ், பின்புறமும் எல்.இ.டி. லைட்டிங் உள்ளது.

     2022 ஆடி கியூ7

    ஆடி கியூ7 பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரீமியம் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கியூ7 மாடலில் ரியர்-சைடு ஏர்பேக், ஹீடெட் ஓ.ஆர்.வி.எம்.-கள், மேம்பட்ட டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளது.

    2022 ஆடி கியூ 7 மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில்-லைட்கள், பெரிய ஏர் இன்டேக், வட்ட வடிவ வீல் ஆர்ச்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஆடி கியூ7 மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனத்தின் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. முன்னதாக அக்டோபர் மாதம் ஜீப் காம்பஸ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை காம்பஸ் மாடல் விலை ரூ. 58 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. 

    1.4 லிட்டர் பெட்ரோல் டி.சி.டி. என்ஜின் கொண்ட காம்பஸ் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 58 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் தவிர அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

     ஜீப் காம்பஸ்

    ஜீப் காம்பஸ் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 டீசல் மாடல்களின் வினியோக விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்தியாவில் ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்து. பின் அக்டோபர் மாதத்தில் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட் வினியோகம் துவங்கியது. தற்போது எக்ஸ்.யு.வி.700 டீசல் வேரியண்ட் வினியோகமும் துவங்கி இருப்பதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.700 டீசல் வேரியண்ட் 2.2 லிட்டர், எம்-ஹாக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மல்டி-ஸ்லாட் கிரில், புதிய மஹிந்திரா லோகோ, ஃபாக் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
    ×